காதலர் தினத்தில் கல்யாண அறிவிப்பு: சாயீஷாவை மணக்கும் ஆர்யா!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் ஆர்யா தனது காதல் கல்யாணம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான நடிகர் ஆர்யா, பெண்கள் வசீகரம் செய்யும் கனவு நாயகனாக வலம் வருகிறார். அவ்வப்போது நாயகிகளுடன் கிசுகிசுவில் சிக்கும் ஆர்யா, சமீபத்தில் நடிகை ஒருவரை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் பரவின.

‘வனமகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சாயீஷாவும், ஆர்யாவும் காதலிப்பதாகவும், அடுத்த மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால், இது குறித்து இரு தரப்பினரும் எவ்வித எதிர்ப்பும், மறுப்பும் தெரிவிக்காத நிலையில், இன்று (பிப்.14) காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் ஆர்யாவும், சாயீஷாவும் தங்களது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

‘கஜினிகாந்த்’ திரைப்படத்தில் இணைந்து நடித்த ஆர்யா-சாயீஷா இடையே காதல் மலர்ந்ததையடுத்து, இருவீட்டார் சம்மதத்துடனும் இவர்களது திருமணம் இஸ்லாமிய முறைப்படி அடுத்த மாதம் நடைபெறவுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யாவின் நெருங்கிய நண்பரும், நடிகருமான விஷாலும், ஆந்திர தொழிலதிபரின் மகள் நடிகை அனிஷா அல்லாவை திருமணம் செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இறுதியில் பாலிவுட்டில் திருமண கொண்டாட்டங்கள் களைக்கட்டிய நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கோலிவுட்டிலும் வரிசையாக திருமணங்கள் நடைபெறுகின்றன.

Arya and Sayyeshaa are officially getting married next month

People looking for online information on Arya, Arya Sayyeshaa Wedding, GhajiniKanth, Sayyeshaa Saigal, Vaalentines Day will find this news story useful.