‘இளையராஜா 75’ விழாவில் பங்கேற்பாரா ஆஸ்கர் நாயகன்?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இளையராஜாவை கவுரவிக்கும் விதமாக நடைபெறவுள்ள ‘இளையராஜா 75’ விழாவில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘இளையராஜா 75’ விழா வரும் பிப்.2, 3 தேதிகளில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல்ஹாசனும் கலந்துக் கொள்கின்றனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் துவக்கி வைக்கும் இந்த இசை திருவிழாவில் திரைத்துறையை சேர்ந்தவர்களும், அரசியல் பிரபலங்களும் பங்கேற்கவுள்ளனர்.

‘இளையராஜா 75’ விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இவ்விழாவில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானும் கலந்துக் கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

AR Rahman has confirmed that he is attending Ilaiyaraaja 75 event

People looking for online information on AR Rahman, Ilaiyaraaja, Ilaiyaraaja 75, Producers council, TFPC, Vishal will find this news story useful.