ரஜினி படத்துக்கு முன் ஏ.ஆர்.முருகதாஸ் வசனத்தில் ஒரு ஹாலிவுட் படம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

மார்வலின் மிக பிரம்மாண்ட படமான அவெஞ்சர்ஸ் படத்தின் இறுதி பாகமான ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்தின் தமிழ் வெர்ஷனுக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுதுகிறார்.

AR Murugadoss pens dialogues for Avengers Endgame in Tamil

கடந்த ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி’ திரைப்படம் இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி வசூலில் பெரும் சாதனை படைத்தது. இந்தியாவில் நான்கு மொழிகளில் வெளியாகி முதல் நாளிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை பெற்றது.

இந்நிலையில் தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் சூப்பர் ஹீரோக்களின் படமான அவெஞ்சர்ஸ் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ திரைப்படத்திற்கு தமிழில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுதுகிறார்.

‘ரமணா’,’கஜினி’,‘துப்பாக்கி’,‘கத்தி’,‘சர்கார்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி பிரபலமான ஏ.ஆர்.முருகதாஸ் இது குறித்து கூறுகையில், மார்வல் திரைப்படங்களின் கதை, அதிசயமூட்டும் காட்சிகள், பிரம்மாண்டம் என அனைத்தும் எனக்கு பிடிக்கும். கதாசிரியர், இயக்குநர் என்பதை தாண்டி அவெஞ்சர்ஸ்க்கு நானும் ஒரு ரசிகன். எனது மகன் ஆதித்யாவும் தீவிர அவெஞ்சர்ஸ் ரசிகன்.

அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோக்களுக்கு வசனம் எழுதுவதில் மகிழ்ச்சி. ஒரிஜினல் படத்தின் தாக்கம் சற்றும் குறையாத விதமாக வட்டார வழக்குகளில் எளிய நடையில் வசனம் எழுதவிருப்பதாகவும் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

OTHER NEWS STORIES

AR Murugadoss pens dialogues for Avengers Endgame in Tamil

People looking for online information on AR Murugadoss, Avengers Endgame, Avengers Infinity War - Tamil, Rajinikanth, Sarkar will find this news story useful.