சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளியான படம் பேட்ட. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசைமைத்திருந்தார்.
இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் Behindwoods தளத்துக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அதில்,
கார்த்திக் சுப்புராஜ் இசை வழியாகவே கதை சொல்லுவார். எனக்கு கதை சொல்லும் போதே இங்கே பாடல் வரலாம். இங்கே பிட் சாங் வரலாம். என முதலிலேயே சொல்லி விட்டார். தலைவர் படம் கிடைக்குது, அதே நேரம் இசை சார்ந்த படமும் எனக்கு கிடைக்குது. அது எனக்கு தூண்டுகோலாக இருந்தது. இதான் என் அதிக டிராக் இடம் பெற்ற படம். என்றார்,
பின்னர் தொகுப்பாளர் அவரிடம், இந்த படத்தில் 'ஏற்கனவே 20 வருஷம் லேட் 'என வசனம் பேசியிருப்பார். தனது அரசியல் வருகைக்காக இதனை ரஜினி பேசினாரா எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அனிருத், அந்த கதைக்காக அவர் பேசுன டயலாக். அடுத்தவங்கள மதிக்குற மனிதர். அவர் மக்களுக்கு கண்டிப்பா நல்லது பண்ணுவாரு. அவர் இவ்வளவு உயரத்துக்கு போன பிறகும் அடுத்தவங்கள பத்தி கேர் பண்ணி என்கரேஜ் செய்து கொண்டு இருக்கிறார். அதே மாதிரி மக்களுக்கும் நல்லது பண்ண வேண்டும் என்று தான் அரசியலுக்கு வந்திருக்கார் என்றார்.