விஸ்வாசம் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா ? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

அஜித் - சிவா கூட்டணியில் பொங்கலை முன்னிட்டு வெளியான படம் விஸ்வாசம். காதல், காமெடி, சென்டிமென்ட் என கம்ப்ளீட் கமர்ஷியல் பேக்கேஜாக உருவாகியிருக்கும் இந்த படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

தந்தை - மகள் பாசத்தை உணர்வுப் பூர்வமாக பேசும் இந்த படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்துடன் வெளியானதால் இந்த படத்தின் வசூல் விவரங்களை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டிவந்தனர்.

இந்நிலையில் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட்டுள்ள கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், விஸ்வாசம் ரூ.125 கோடி வேட்டை. அங்காளி பங்காளி ஆதரவோட  இன்று தமிழ்நாட்டில் மட்டும் விஸ்வாசம் ரூ. 125 கோடியைக் கடந்துள்ளது. நன்றி மக்களே எனப் பதிவு செய்துள்ளது.

மேலும், இந்த பிளாக்பஸ்டர் வெற்றிக்கு காரணமான விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் , அங்காளிஸ் பங்காளிஸ் (ரசிகர்கள்) ஆகியோருக்கு நன்றி என தெரிவித்துள்ளது.

Ajiths Viswasam collects in 125 Crore in tamilnadu only

People looking for online information on Ajith Kumar, Anika, Nayanthara, Viswasam will find this news story useful.