சூப்பர் ஸ்டாரை கவுரவப்படுத்திய ஏர் ஏசியா

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கவுரவிக்கும் விதமாக குறைந்த விலையில் விமான சேவை வழங்கி வரும் ஏர் ஏசியா நிறுவனம் சார்பில் கபாலி போஸ்டர் இடம்பெற்ற சிறிய ரக மாடல் ஏர்கிராப்ட் வழங்கப்பட்டது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கபாலி. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த இப்படத்தின் ஏர்லைன் பார்ட்னராக ஏர் ஏசியா நிறுவனத்துடன் கபாலி படக்குழு ஒப்பந்தம் செய்திருந்தது. 

இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத வகையில் கபாலி படக்குழு பயன்படுத்திய இந்த விளம்பர உத்தி திரைத்துறையினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கவுரவிக்கும் விதமாக ஏர் ஏசியா நிறுவனம் சார்பில் கபாலி போஸ்டர் இடம்பெற்ற சிறிய ரக மாடல் ஏர்கிராப்ட் ஒன்று வழங்கப்பட்டது.

இது குறித்து இந்திய ஏர் ஏசியா நிறுவனத்தில் சிஇஓ சுனில் பாஸ்கரன், ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படத்துடன் ஏர்லைன் பார்ட்னராக இருந்தது கவரமளிப்பதாக கூறினார்.

Air Asia honours Indian Superstar Rajinikanth

People looking for online information on Air Asia, Airlines, Kabali, Kalaippuli S Thanu, Rajinikanth will find this news story useful.