அஜித்துக்கு பிறகு சிம்புவுக்காக இதனை செய்த ரசிகர்கள்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில்  நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

கடைசியாக சிம்பு நடித்து வெளியான செக்கச் சிவந்த வானம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனால் இந்த வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தை ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்துடன் வரவேற்கத் தொடங்கியுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக பாண்டிச்சேரியை சேர்ந்த சிம்பு ரசிகர்கள் படத்துடன் கூடிய பேனரை ரசிகர்கள் நடுக்கடலில் ஒரு பகுதியில் கட்டி படத்துக்கான கொண்டாட்டத்தை தொடங்கி வைத்துள்ளனர்.

அதே இடத்தில் தான் விஸ்வாசம் ரிலீஸின் போது அஜித் ரசிகர்களும் படத்தின் பேனரை கட்டி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

After Ajith fans, Simbu fans did this for Vantha Rajavathaan Varuven

People looking for online information on Simbu, Str, Vantha Rajavathaan Varuven, Viswasam will find this news story useful.