நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவிற்கு இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது.
பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து, அவர்களைக் கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷண் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படும். அந்தவகையில் 2019ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
70வது குடியரசு தின விழாவில் பத்ம விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பிரபுதேவா, மோகன்லால், கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் உட்பட 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 94 பேர் பத்ம ஸ்ரீ விருதும், 4 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 14 பேருக்கு பத்ம பூஷண் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தை சேர்ந்த நடிகர் பிரபுதேவா, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், மருத்துவர் வெங்கடசாமி, பங்காரு அடிகளார், பாடகர் சங்கர் மகாதேவன், சமூக சேவகர் மதுரை சின்னப்பிள்ளை,மருத்துவர் ஆர்.வி. மணி, நர்த்தகி நடராஜ், ட்ரம்ஸ் சிவமணி, கண்மருத்துவர் ரமணி, கால்பந்து வீரர் சுனில் சேத்ரி, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, நடிகர் மனோஜ் பாஜ்பாயி உள்ளிட்டோருக்குப் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், நடிகர் மோகன்லால் உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் விருதும், டீஜன்பாய், இஸ்மாயில் ஓமர், அனில்பாய், பல்வந்த் மோரேஷ்வர் ஆகிய 4 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ள பிரபலங்களுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பத்ம விருது பெறும் பிரபலங்களின் பட்டியல் இதோ : https://mha.gov.in/sites/default/files/Padma_Awards_2019.pdf