அஜித் - இயக்குநர் சிவா நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் விஸ்வாசம். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.
இந்த படத்தில் அஜித்துக்கும் அவரது மகளாக நடித்திருந்த அனிகாவுக்கும் இடையேயான பாசப் போராட்டம் காண்போரை கண் கலங்கச் செய்தது.
இந்நிலையில் நடிகர் அஜித்குமார் தனது தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், தனிப்பட்ட முறையிலும், படங்கள் சார்ந்து எந்த கட்சியின் சாயம் தன் மீது விழக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன் என்பதை அனைவரும் அறிவர்.
சமீபகாலத்தில் என் பெயர் சில அரசியல் நிகழ்வுகளில் பயன்படுத்துவது குறித்து அறிந்தேன். இது என்னுடைய அரசியல் நிலைப்பாட்டை காட்டுவதாக அமைந்துவிடும். எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் நிலைப்பாட்டில் எந்த ஆர்வமும் இல்லை. என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரபல குணச்சித்திர நடிகர் மோகன் ராம் Behindwoods தளத்துக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
தமிழ்நாட்டில் டிக்கெட் விற்பனை முறைகள் கணினி முறையாக்கப்படவில்லை. எனவே இதனை உறுதியாக கூறமுடியாது. வெளிநாடுகளில் எல்லாம் கணினி முறையில் செயல்படுவதால் அதனை உண்மை என நம்பலாம்.
அஜித் கூறியது மிகவும் சரி. அதனை மற்ற நடிகர்களும் பின்பற்ற வேண்டும். தங்களது ரசிகர்களை சமூக வலைதளங்களில் இப்படி நடந்துகொள்ள வேண்டும் தெரிவிக்க வேண்டும் என்றார்.