சமூக வலைத்தளங்களில் லீக்கான நிர்வாண புகைப்படங்களில் இருப்பது நான் தான் என பாலிவுட் நடிகர் அலி ஃபாசல் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் பாலிவுட் நடிகர் அலி ஃபாசலின் நிர்வாண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் லீக்காகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை குறித்து நடிகர் அலி ஃபாசல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், அவை எனது புகைப்படங்கள் தான். மார்ஃபிங் செய்யப்பட்டவை அல்ல. எப்படி ஆன்லைனில் லீக்கானது என்று தெரியவில்லை. நிர்வாண புகைப்படங்கள் பற்றி பேச விரும்பவில்லை. அது என் தனிப்பட்ட விஷயம். ஆனால் இதை யார் செய்தார்கள் என்பதை கண்டுப்பிடிப்பேன்.
இது என் பிரைவசி, அதை மதிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் இதை பற்றி பேச விரும்பவில்லை. எனது ரசிகர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் ஆதரவு எனக்கு இருக்கும் என்று நம்புகிறேன் என வீடியோ பதிவில் பேசியுள்ளார்.
‘விக்ரம் வேதா’ நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பாலிவுட்டில் அறிமுகமாகும் ‘மிலன் டாக்கீஸ்’ திரைப்படத்தின் ஹீரோ தான் இந்த அலி ஃபாசல் என்பது குறிப்பிடத்தக்கது.