எங்க கிஸ் பண்ணனும்? ஓவியா விஜே-வை கலாய்த்த கேம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா நடித்துள்ள 90ML திரைப்படம் வரும் மார்ச்.1ம் தேதி ரிலீசாகவுள்ளது.

பெண் இயக்குநர் அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள 90ML திரைப்படம் அடல்ட் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. நடிகர் சிம்பு இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், 90ML திரைப்படம் ரிலீசாகவுள்ள நிலையில், நடிகை ஓவியா Behindwoods தளத்துக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். விஜே நிக்கியுடன் ‘ஹக் மீ-கிஸ் மீ-ஸ்லாப் மீ’ செக்மெண்ட்டில் பங்கேற்ற ஓவியா பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.

அப்போது பேசிய அவரிடம், ரசிகர்கள் மீது எப்போவாது கோவப்பட்டதுண்டா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓவியா, செல்ஃபிக்காக என்னை தொல்லை செய்பவர்கள் மீது கோவப்பட்டது உண்டு. அவர்களுடன் செல்ஃபி எடுக்க போஸ் கொடுக்க மாட்டேன். ஆனால், என்னுடைய உண்மையான ரசிகர்களை அதிகம் நேசிக்கிறேன் என்றார்.

அதேபோல், முன்னாள் காதலரின் ஃபோனை தெரியாமல் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு, காதலரின் ஃபோனில் நிச்சயம் ஏதேனும் ரகசியம் இருக்கும் அதை பார்த்தால் நமது மனம் தான் கஷ்டப்படும் என்றதுடன், காதல் என்றாலே பிரச்னை தான் அந்த பேச்சவிடுங்க என்று அவரது ஸ்டைலில் பேசினார்.

நடிகர் ஆரவுடன் லவ் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, ஆரவ் என் வாழ்வில் இருக்கிறார். எந்த மாதிரி ரிலேஷன் என்று தெளிவாக எனக்கு சொல்ல தெரியவில்லை என்றார். மேலும், பேட்டிகளில் இதுவரை பொய் சொன்னதில்லை, சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறினார்.

எங்க கிஸ் பண்ணனும்? ஓவியா விஜே-வை கலாய்த்த கேம் VIDEO

Tags : Oviya, 90 ML, Str, Simbu

90ML - Oviya's Hug Me Kiss Me Slap Me segment with VJ Nikki

People looking for online information on 90 ML, Oviya, Simbu, Str will find this news story useful.