முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் இம்ரான்கான் தற்போது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் என்ற கட்சியின் தலைவர். பாகிஸ்தானின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படும் இவர் தன் இரண்டாவது மனைவி ரேஹம் கான் எழுதிய சுயசரிதைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கருத்துக்களால் தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறார்.


அந்த புத்தகத்தில் இம்ரான்கான் இருபாலுறவில் நாட்டம் கொண்டவரென்றும் போதை மருந்துகள் எடுத்துக் கொள்வார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு சட்டத்திற்கு புறம்பாக பல குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் வரும் புதன்கிழமை பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த சர்ச்சை இம்ரான் கானுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாக கருதப்படுகிறது.


தனது முதல் இரு மனைவிகளான பிரிட்டனைச் சேர்ந்த ஜெமிமா கோல்டுஸ்மித் மற்றும் ரேஹம் கானை விவாகாரத்து செய்துவிட்ட இம்ரான் கான் சமீபத்தில் மூன்றாவதாக புஸ்ரா மேனகா என்பவரை திருமணம் செய்துகொணடார். பிரிட்டனின் டெய்லிமெயிலுக்கு அளித்த பேட்டியில் தனது மூன்றாவது மனைவியின் முகத்தை திருமணத்திற்கு பிறகே பார்த்ததாகவும் முதல் மனைவியுடன் இன்னும் நட்புடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

ஆனால் இரண்டாவது மனைவியான ரேஹம் கான் பற்றி பேசுகையில், "நான் வாழ்க்கையில் பல தவறுகள் செய்திருக்கிறேன். ஆனால் அவற்றில் மிகப்பெரிய தவறு எனது இரண்டாவது திருமணம் தான்," என கூறியுள்ளார்.

BY BEHINDWOODS NEWS BUREAU | JUL 23, 2018 9:35 AM #IMRANKHAN #REHAMKHAN #JEMIMAGOLDSMITH #BUSHRAMANEKA #WORLD NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS