வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கும் அமேசான்!
Home > Tamil Nadu newsஆன்லைனில் பொருட்களை வாங்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.இதனால் ஆன்லைன் ஷாப்பிங்யில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள் நாளுக்கு நாள் புதிய புதிய சலுகைகளை வழங்கி வருகிறது.இந்நிலையில் ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் அமேசான் நிறுவனம்,ஆர்டர் செய்தால் 3 மணி நேரத்தில் டெலிவரி ஆகும் புதிய திட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியில்இறங்கியுள்ளது.
தற்போது ஆன்லைனில் ஆர்டர் செய்யும் மக்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்னை பொருட்கள் டெலிவரி ஆகும் நேரம் தான்.ஆசை ஆசையாய் வாங்கும் பொருட்கள் நேரத்திற்கு வருவதில்லை என்பதே பெரும்பாலான மக்களின் புகார்.இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கே அமேசான் நிறுவனம் தற்போது இந்த புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.
தற்போது அமேசான் கிரேட் இந்தியன் சேல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் குறிப்பிட்ட வகை ஸ்மார்ட்போன் மாடல்கள் ஆர்டர் செய்தால், அது 3 முதல் 5 மணி நேரத்துக்குள்ளாக டெலிவரி செய்யப்படும் என அமேசான் தெரிவித்துள்ளது.
மேலும் அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி இலவசமாக வழங்கப்படுகிறது. மற்ற பொது வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பெற வேண்டுமென்றால், டெலிவரியின் போது 150 ரூபாய் கூடுதலாக கொடுக்க வேண்டும்.தற்போது இந்த வசதி டெல்லியில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.
விரைவில் அமேசானின் இந்த புதிய சலுகை நாடு முழுவதும் விரிவு படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் மூலம் மக்களின் ஷாப்பிங் அனுபவத்தை எளிமையாக்க முடியும் என அமேசான் நிறுவனம் நம்புகிறது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பிலான ஸ்மார்ட்போன்கள் மலிவு விலையில்: ஆன்லைனில் கூட்ட நெரிசல்..!
- பெரும் போரில் இருந்து தப்பி வாழும் அமேசானின் கடைசி ஆதிவாசி!
- 'கேரள மக்களுக்கு'..உங்கள் உதவிகளை அமேசான் வழியாகவும் வழங்கலாம்!
- Don't reply to emails after office hours: This top company tells staff
- 'வருடம் முழுவதும் இலவச சந்தா'..வருகிறது பிளிப்கார்ட் பிளஸின் அதிரடி சலுகை!
- Walmart takes control of Flipkart
- Top e-commerce site faces opposition after selling child sex dolls
- Is Amazon buying Flipkart? Clarification here
- Top MNC lays off over 60 employees in a week
- Courier man dupes Amazon of Rs 4.3 crore