அசல் வாகனப் பதிவுச்சான்று தராததால் தன்னை போக்குவரத்து துணை ஆய்வாளர் அடித்து துன்புறுத்தியதாக 22 வயதான இளைஞர் ஒருவர் தனது முகநூல் பதிவில் குற்றம் சாட்டியுள்ளார். ஹாரூன் சேட் என்ற அந்த இளைஞர் தனது நண்பர்களுடன் ஒரு திருமணத்திற்கு சென்று திரும்பி வரும்போது ஸ்பர்டேன்க் சாலை அருகில் போக்குவரத்து போலிசாரால் நிறுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய நண்பரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாததால் அவரிடம் 300 ரூபாய் போலிசார் பெற்றுக்கொண்டதாகவும் ஆனால் அதற்கு ரசீது கொடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். பின்பு சேத்துப்பட்டு துணை ஆய்வாளர் இளையராஜா ஹாரூனின் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச்சான்றைப் பார்க்க வேண்டும் என்று கேட்டதாகவும் ஆனால் தன்னிடம் பதிவுச்சான்றின் நகல் மட்டுமே இருந்ததாகவும் ஹாரூன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜா அசலைக் கேட்டபோது, தான் காலையில் அசலைக் கொண்டுவருவதாகக் கூறிய அவர் தனது இருசக்கர வாகனத்தையும் காவல்நிலையத்தில் விட்டுச்செல்வதாக கூறியுள்ளார். ஆனால் துணை ஆய்வாளர் இளையராஜா தன்னை கடுமையாக அடித்து துவைத்ததாகவும் தான் பத்து முறை மன்னிப்பு கேட்ட பின்பே தன்னை அடிப்பதை நிறுத்தியதாகவும் தனது முகநூல் கூறியுள்ளார்.
மேலும் இளையராஜா தன்னுடைய மற்றும் தன் இரு நண்பர்களின் செல்போன்களை பிடுங்கி வைத்துக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் ஹாரூன் தெரிவித்துள்ளார்.
OTHER NEWS SHOTS