சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ரெட்டியூரில் காவிரியாற்றில் குளித்துக் கொண்டிருந்த ஆறு பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அடித்துச் செல்லப்பட்டவர்களில் ஆறு கல்லூரி மாணவிகளும் இரு ஆண்களும் அடங்குவர். ஆனால் அவர்களில் ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டார். நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்ற ஐந்து பேரையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அனைவரும் இன்று விடுமுறை என்பதால் சுற்றிப்பார்ப்பதற்காக குடும்பத்தினருடன் காவிரியாற்றுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. ஆற்றில் வெள்ளம் அதிகமாக ஓடுவதால் தேடுதல் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என்றும் யாரும் செல்பி எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர். மீட்புக்குழுவினருடன் காவல்துறையினர் மற்றும் மருத்துவக்குழுவும் உடனிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Tamil Nadu: Elderly man forced to clean toilet with bare hands
- சிறையில் நடிகர் 'மன்சூர் அலிகான்' உண்ணாவிரதம்!
- சேலம்-சென்னை 'பசுமைவழிச்சாலையை' இப்படி அமைக்கலாமே?.. நடிகர் விவேக் யோசனை!
- Karnataka to nominate representatives for Cauvery water
- பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால்.. நடிகர் மன்சூர் அலிகான் கைது
- Salem: Gang murders auto-driver in broad daylight
- CM Palaniswami announces water cannot be released from Mettur Dam on June 12
- Major fire breaks out at power grid sub-station in Salem
- Centre notifies Cauvery scheme in Union Gazette
- Major twist: Karnataka CM invites Rajinikanth to check Karnataka’s dams