நெஞ்சை உருக்க செய்யும், 19 வயது இளைஞரின் தற்கொலைக்கான காரணம்!
Home > தமிழ் newsமிகவும் இளகிய மனம் கொண்ட பல இளைஞர்களின் தற்கொலைக்கு மன அழுத்தமும் பயமும் முக்கிய காரணங்களாகின்றன. குஜராத்தில் செல்போனை தொலைத்ததற்காக தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட 19 வயது இளைஞனின் குடும்பத்தார் இந்த விஷயத்தை நன்றாகவே உணர்ந்திருக்கக் கூடும்.
இளம் பிராயத்தில் இருந்தே சிறுவர்களை பயம் காட்டி வளர்க்காமல், தவறு செய்தாலும் அதை மன்னித்து, திருத்திக்கொள்வதற்கான சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் குழந்தைகளுக்கு ஒரு வாய்ப்பாக பெற்றோர்கள் அளித்திருக்க வேண்டும் என்பது அவசியமான ஒன்று. அதனாலேயே குஜராத்தின் பண்டசேராவில் உள்ள கர்மயோகி பகுதியைச் சேர்ந்த 19 வயது புரோமோத் ரத்தோடு, தான் டிரைவிங் வேலைக்குச் சென்று சம்பாதித்து வாங்கிய புதிய செல்போனை தொலைத்துவிட்டதால் அதை பெற்றோர்களிடம் சொல்வதற்கு தயங்கி மறைத்திருக்கிறான்.
அதோடு நிற்கவில்லை, 20 ஆயிரம் ரூபாய் மதிப்புமிக்க அந்த செல்போனை ஏன் தொலைத்தாய் என பெற்றோர்கள் கேட்டுவிடுவார்களோ என்கிற பயத்தில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் எவ்வித கடிதமும் கண்டுபிடிக்கப்படாததால் வேறு கோணங்களிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, புதிய செல்போனை தொலைத்ததால், புரோமோத் மனம் வெதும்பி இருந்ததை பார்த்ததாகவும் அவரது பெற்றோர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Bizarre! Man Commits Suicide After Eating 8 Pigeon Eggs; Claimed He Saw Satan
- Passengers On Domestic Flights Will Soon Be Able To Make Calls & Access Internet Mid-Air
- வகுப்பில் மாணவன் ‘இவ்வாறு’ எழுதியதால் 5 பள்ளிச் சிறுமிகள் தற்கொலை முயற்சி!
- திருமணம் ஆகி 3 மாதமே ஆன புதுமாப்பிள்ளை லாட்ஜில் தூக்கிட்டு தற்கொலை!
- ‘சார்..போஸ்ட் மார்டம் பண்ணாதீங்க.. இது தற்கொலைதான்’.. மகனைக் கொன்று தானும் இறந்த தந்தையின் கடிதம்!
- Woman Drinks Her Dog's Urine To Help Get Rid Of Acne & Depression; Says It Can Cure Cancer Too
- Google's New Smart Jacket Will Warn You If You Leave Your Phone Behind
- தாயின் நினைவு நாளுக்கு விடுமுறை கிடைக்காததால் ஊழியர் தற்கொலை!
- கண் முன்னே தூக்கிட்டு தற்கொலை செய்த அம்மா.. புரியாமல் அழுத 3 வயது மகன்!
- திருமண பேச்சுவார்த்தை தள்ளிப்போனதால் தற்கொலை செய்துகொண்ட இளம் தம்பதியர்!