'வாழ்வின் காதலே'... உனது கனவுகள் நிஜமாக வாழ்த்துகிறேன்!

Home > தமிழ் news
By |
'வாழ்வின் காதலே'... உனது கனவுகள் நிஜமாக வாழ்த்துகிறேன்!

நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான யாஷிகா ஆனந்த், தனது தோழி ஐஸ்வர்யா தத்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

 

பிக்பாஸ் போட்டியாளரும், நடிகையுமான ஐஸ்வர்யா தத்தா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் வழியாக தெரிவித்து வருகின்றனர்.

 

அந்தவகையில் நடிகை யாஷிகா ஆனந்தும் தனது தோழிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து இருக்கிறார். அதில்,'' மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேபி. எனது வாழ்வின் காதலே! உன்னுடைய கனவுகள் அனைத்தும் நனவாக கடவுளை வேண்டிக்கொள்கிறேன். நீ என்னுடைய வாழ்க்கையில் வந்தது என்னுடைய அதிர்ஷ்டம்,'' என வாழ்த்தியிருக்கிறார்.

 

பதிலுக்கு ஐஸ்வர்யா,'' நன்றி குட்டு புட்டு'' என தனது தோழிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா தத்தா..

BIGGBOSS2TAMIL, KAMALHAASAN, AISHWARYADUTTA, YASHIKAAANAND

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS