எளிய நடையில் மிதமான விலையில் ஒரு ஸ்மார்ட் போன் என்றால் பலரது விருப்பம், சாம்சங்கிற்கு அடுத்து, ஸியோமிதான். எடை குறைவான செல்போன்கள், அதிக ஆப்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தாத வரையில் சீரான வேகத்தில் இயங்கும் இந்த மொபைல்களுக்கு பெரும்பாலானோர் முன்னுரிமை கொடுப்பதுண்டு.
இடைப்பட்ட அம்சங்களைக் கொண்டு, பெரிய ஸ்கிரீன் உள்ள மொபைல்களை குறைவான விலையிலும் வாங்க முடிவது ஸியோமியின் கூடுதல் சிறப்பு. இந்நிலையில் ஸியோமி புதிதாக சில சப்-பிராண்டு செல்போன்களை உருவாக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது.
அதன் ஓப்பனிங் ’பந்தாக’, போகோ F1 ரக செல்போன்களை சந்தையில் களமிறக்கத் திட்டமிட்டுள்ளது. ஆப்பிள் ஐ போன்களில் பயன்படுத்தப்படும் Qualcomm Snapdragon 845 சிப்கள் இந்த போன்களில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. கள்ள மார்க்கெட்டில் முன்பே களமிறங்கிவிட்டதாக வீடியோக்கள் பகிரப்படும் இந்த செல்போன்களை ஸியோமி நிறுவனம் வருகிற ஆகஸ்ட் 22ல் முறையாக வெளியிடவுள்ளது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS