'நான் என்ன தான் தப்பு செஞ்சேன்'...இந்தியாவிற்காக சதம் அடித்தது குற்றமா?...ஐபிஎல் ஏலம் குறித்து புலம்பும் வீரர்!

Home > தமிழ் news
By |

அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் தன்னை எந்த அணியும் எடுக்காத காரணத்தினால் 'நான் என்ன தவறு செய்தேன்,என்று எனக்கு தெரியவில்லை' என மனோஜ் திவாரி வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

 

இந்தியாவின் மிக பெரிய கிரிக்கெட் திருவிழாவான,ஐபிஎல் போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது.இதற்காக வீரர்களை ஏலம் எடுக்கும் படலம் நேற்று முன்தினம் முடிவடைந்தது.அனைத்து அணிகளும் வீரர்களை போட்டி போட்டுகொண்டு ஏலத்தில் எடுத்தது.இதில் ரூ.20 லட்சம் அடிப்படை தொகைக்கு ஏலத்தில் இருந்த தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தியை,கிங்ஸ் லெவன் அணி ரூ. 8.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.சென்னை அணி வருணை ஏலத்தில் எடுக்க முயன்றும் அது முடியாமல் போனது.

 

மேலும் மோகித் சர்மாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரூ.5 கோடிக்கும்,ருட்டுராஜ் கைக்வாட் என்ற இளம் வீரரை சென்னை அணி ரூ. 20 லட்சத்துக்கும் ஏலத்தில் எடுத்தது.இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரியை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.இதனால் தனது ஆதங்கத்தை ட்விட்டரில் கொட்டி தீர்த்துள்ளார்.

 

இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'எனக்கு பெரும் வியப்பாக இருக்கிறது.இந்தியாவிற்காக சதம் அடித்திருக்கிறேன்,பல ஆட்டநாயகன் விருதுகளை வாங்கியிருக்கிறேன்.ஆனாலும் 14 போட்டிகளில் புறக்கணிக்கப்பட்டேன்.2017ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் பல விருதுகளை வாங்கியிருக்கிறேன்.ஆனால் என்ன தவறு செய்தேன் என தெரியவில்லை' என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

CRICKET, IPL, MANOJ TIWARY, IPL AUCTIONS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS