பாடம் நடத்தாமல், பாடல் ஆப்புக்கு அடிமையாகும் பள்ளி ஆசிரியை!

Home > தமிழ் news
By |

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பள்ளி ஒன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவர், இரவு முழுவதும் ஸ்மூல், மியூசிக்கலி போன்ற பொழுதுபோக்கு செயலிகளில் லையித்து அதிலேயே நேரத்தை கழித்துவிட்டு பள்ளிக்கு வருவதால் ஒழுங்காய் பாடம் நடத்துவதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. 

 

இதுபோன்ற செயலிகள் மூலம் திறமைகளை வெளிப்படுத்தி வரும் நபர்கள் ஒருபுறம் இருக்க, பலரும் இவற்றிற்கு அடிமையாகி, முற்றிய மனநிலை காரணமாக இந்த ஆப் தரும் தன்னம்பிக்கையிலேயே உயிர் வாழ்கின்றனர். இவற்றின் மூலம் கிடைக்கும் நட்புகளால் பலர் சொந்த வாழ்க்கையையே மறந்து இவற்றில் பொழுதை கழிக்கும் பரிதாப நிலைகளும் சமீப காலமாக உண்டாகின்றன. 

 

முன்னதாக இதுபோன்ற ஒரு அப்ளிகேஷனில் பாட்டு பாடி வந்த கலையரசன் என்பவரை பலரும் கிண்டல் செய்ததால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், மறைந்து மறைந்து குளியல் அறையில் பாடும் பலரும் முகம் அறியாத ஒருவருடன் இணைந்து பாடும் வாய்ப்பும், அந்த பாடலுக்கு பின்னிசை ஒலிக்கும் வாய்ப்பும் இருப்பதால் பலரும்  இந்த செயலிகளை உபயோகிக்கின்றனர். 

 

ஆனால் மேற்கண்ட ஆசிரியை முத்துலட்சுமியோ, தான் ஒரு பாடகியாக வேண்டும் என நினைத்தவர், பாடம் நடத்தும் ஆசிரியராக ஆகிவிட்டாரோ என்னவோ என்கிற அளவுக்கு இந்த செயலிக்கு அடிமையாகி விட்டதோடு, ஒவ்வொரு பாடலுக்கும் ஏற்றவாறு பலவிதமான கெட்டப்புகளில் தோன்றுகிறார்.

 

இதனால் வாரத்துக்கு 3 நாட்கள் பள்ளி செல்வதே அரிதாக இருப்பதாக அப்பள்ளியின் ஆசிரியர்கள் கூறுகின்றனர். அளவுக்கு மிஞ்சி ‘அடிக்ட்’ ஆனால் அமிர்தமும் நஞ்சுதான் என்கிற முத்தான பழமொழிக்கு வித்தாகிறார் முத்துலட்சுமி.

DINDUGAL, TAMILNADU, TEACHER, APPS, ADICTION, SMULE, MUSICALLY, TIKTOK

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS