மருந்து சீட்டில் ஒரு வார்த்தையை மாற்றி எழுதிய டாக்டரால் பார்வையை இழந்த பெண்!

Home > தமிழ் news
By |

மருந்து சீட்டில் மருத்துவர் எழுதிக்கொடுத்த ஒரு எழுத்து மாறியதால் ஒருவரின் வாழ்க்கையே மாறிய சம்பவம் ஸ்காட்லாண்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காட்லாண்டின் கிளாஸ்கோ சிட்டி மருத்துவமனைக்கு கண் பரிசோதனைக்காகச் சென்ற பெண்மணியின் கண்களை பரிசோதித்த மருத்துவர், மருந்துச் சீட்டில் கண்வறட்சிக்கு பயன்படுத்தப்படும் VitA-POS என்கிற மருந்தின் பெயரை எழுதுவதற்கு பதிலாக Vitaros என்று எழுதிக்கொடுத்துள்ளார்.

இதனால் அந்த ஆயின்மெண்டை மெடிக்கலில் வாங்கி கண்களில் தடவிய அந்த பெண்ணின் கண் மணிகளில் வீக்கம் ஏற்பட்டு பார்வை மங்கலாக தெரிய ஆரம்பித்துள்ளது. பிறகு சந்தேகப்பட்டு மீண்டும் பரிசோதித்ததில் இந்த உண்மையில் Vitaros என்பது தவறான மருந்து என்பதை கண்டுபிடித்து, மருத்துவர்கள் மக்டலினா எடிங்டன், ஜுலி கோன்னலி, டேவிட் லாக்கிங்டன் என மூன்று பேர்  கொண்ட மருத்துவக்குழு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் மற்ற மருத்துவர்களுக்கும் மருந்துகளை கேபிட்டல் லெட்டரில் எழுத வேண்டும் என்றும், ஒத்த எழுத்துக்களை கொண்ட மருந்துகளின் பெயர்களை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

WOMEN, DOCTORS, WRONG, PRESCRIPTION, BIZARRE, DRYEYE, MISTAKE, CARELESSNESS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS