அப்பா இறந்த துக்கத்தில் அதிகம் சாப்பிட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட சோதனை!

Home > தமிழ் news
By |

பிரிட்டனில் வசித்து வரும் ஸ்டெஃப் சைக்ஸ் எனும் பெண்மணி, உடல் எடை 160 கிலோவை தொட்டதாலும், ஒரு நாளைக்கு 5000 கலோரிகள் உடலில் கொழுப்பாக இணைந்து உறைந்துவிட்டதாலும், பருமனாகி பத்தாண்டு காலம் வாழ்ந்துள்ளார். 

 

இதற்கு ஒரு அதிர்ச்சிக் காரணமும் உண்டு. தனது 24 வயது வயதில், தன் காதலருடன் ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றபோது, தனது அப்பா ஆலனுக்கு, அன்றைய தினம் தந்தையர் தினம் என்பதால், ‘நீங்கள் ஒரு சிறந்த அப்பா.. எனக்காக நீங்கள் செய்தவற்றை நான் அறிவேன்.. உங்களுக்கு நன்றி அப்பா’ என குறுந்தகவல் அனூப்பியுள்ளார். அதில் நிச்சயம் அவரது அப்பா நெகிழ்ந்திருக்க வேண்டும். ஆனால் நடந்ததோ அதிர்ச்சி. அன்று இரவு 10 மணிக்கு ஸ்டெஃபின் அம்மாவிடம் இருந்து வந்த போன் காலை அட்டென் செய்த ஸ்டெஃப் தன் தந்தை காலமாகிவிட்டதை எண்ணி இடிந்துபோய் வீட்டுக்குச் சென்றுள்ளார். 

 

பொதுவாக துக்கத்தில் இருப்பவர்கள், அதிகம் சாப்பிட மாட்டார்கள். ஸ்டெஃபோ, அதற்கு நேர்மாறாய், அதிகமாக உருளைக்கிழங்கி சிப்ஸை எடுத்துக்கொண்டுள்ளார். அதுவும் வீட்டை விட்டே வெளியே செல்லாத அளவுக்கு உருளைக்கிழங்கு சிப்ஸூம் வீடுமாக இருந்துள்ளார். சொல்லப்போனால் ‘காஸ் வகை திண்பண்டங்களுக்கு அடிமையாகியுள்ளார்’. இதனால்தான் உடல் எடை 160 கிலோவை தொட்டதோடு, கல்லோரிகள் எரிந்து நொதித்தல் நிகழாமல் சிரமப்பட்டன. 

 

ஆனால் பின்னாளில் ஸ்டெஃப் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பருமனாகி மிகவும் சிரமப்பட்டுள்ளார்.  அதன் பின்னர் தனது அம்மா கூறிய அறிவுரையின் பேரால்,  மெல்ல உடற்பயிற்சி செய்து, தனது 32வது வயதில் தன் உடலை வெகுவாக குறைத்துள்ளார். ஆனாலும் தனது உடல்பகுதியில் உள்ள தோல்களுடன் தசைகள் இறுக்கமடையாததால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார். 

VIRAL, BUZZ, FATHER, DAUGHTER, WEIGHTLOSS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS