காவல்துறை ஜீப்பின் மீதிருந்து தவறி விழுந்த பெண்ணுக்கு விபத்து!

Home > தமிழ் news
By |
காவல்துறை ஜீப்பின் மீதிருந்து தவறி விழுந்த பெண்ணுக்கு விபத்து!

பஞ்சாபில் பெண் ஒருவரை போலீஸ் ஜீப்பின் மீதேற்றி சென்றதால் அவர் தட்டென கீழே விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பஞ்சாபின் ஒரு வீட்டில் முக்கிய வழக்கை விசாரிக்கச் சென்ற காவல் துறையினர், அங்கு இருந்த தம்பதியனரிடம் பேசியுள்ளனர். குடும்பத் தலைவரை விசாரிக்கும் பொருட்டு, அவரது மகனும், அந்த வீட்டு பெண்ணின் கணவருமானவரை, விசாரணைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தனர்.


அதுசமயம் தனது கணவரை காவல்துறையினர் அழைத்துச் செல்வதை ஏற்றுக்கொள்ளாத மனைவி, காவல் துறையினரை மறித்ததை அடுத்து, அந்த பெண்ணை போலீஸின் ஜீப்பில் ஏற்றி போலீசார் தண்டிக்க முயன்றுள்ளனர்.  அதன் பின்னர் ஜீப்பை எடுத்துச் செல்லும்போது, அந்த பெண் தவறி விழுந்து அடிபட்டிருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


ஆனால் உண்மையில் அந்த பெண்ணேதான், ஜீப்பில் ஏறி அமர்ந்தார் என்றும், அவரே விடாப்படியாக வந்து அமர்ந்தார் என்றும் போலீஸ் தரப்பில் இருந்து கூறி, போலீஸ் மீது இருக்கும் குற்றச் சாட்டினை அவர்கள் மறுத்துள்ளனர். உண்மை எதுவென போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ACCIDENT, POLICE, PANJAB

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS