'ஒன்பது கையெறி குண்டுகள்,துப்பாக்கி'...தீவிரவாதிகளை தும்சம் செய்த 'ஒன் உமன் ஆர்மி'!

Home > தமிழ் news
By |

தீவிரவாத தாக்குதலிருந்து சீன தூதரகத்தை காப்பாற்றியதோடு,பல தூதரக அதிகாரிகளையும் காப்பாற்றி இருக்கிறார்,''சுஹாய் அஸிஸ் தல்பூர்'' என்னும் பெண் அதிகாரி.

 

காரச்சியில் உள்ள சீன தூதரகத்தின் மீது பலூச் லிபரேஷன் ஆர்மி என்ற தீவிரவாத அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தார்கள்.இந்த தாக்குதலின் போது காரச்சியில் உள்ள மூத்த காவல்துறை அதிகாரி சுஹாய் அஸிஸ் தல்பூர் மிக சிறப்பாக செயல்பட்டு தீவிரவாத தாக்குதலை முறியடித்திருக்கிறார்.

 

ஒன்பது கையெறி குண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்கள் என தன்னிடம் இருந்த ஆயுதங்களை கொண்டு,பயங்கரவாதிகளை தூதரகத்தில் நுழைய விடாமல் தடுத்ததில் சுஹாயின் பங்கு முக்கியமானது.தீவிரவாதிகள் மருத்து மற்றும் உணவுகளை கொண்டு வரும் வாகனத்தில் பணய கைதிகளை கொண்டு செல்ல இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.உடனே காவல்துறையினர் தூதரகத்தின் நுழைவாயிலை அடைத்தனர்.உடனே தீவிரவாதிகள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினார்கள்.இந்த துப்பாக்கி சூட்டில் காவல்துறையில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

 

உடனே அந்த இடத்திற்கு வந்த சுஹாய் அஸிஸ் தீவிரவாதிகளை நோக்கி தாக்குதல் நடத்த தொடங்கினார்.இந்த தாக்குதலில் சீன தூதரகத்தில் உள்ள பல அதிகாரிகளை  உயிருடன் மீட்டர்.பலரை தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்றிய சுஹாய்,சிந்து மாகாணத்தின் டாண்டோ முஹம்மது கான் மாவட்டத்தில் உள்ள நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 2013-ல் சென்ட்ரல் சுப்பீரியர் சர்வீஸ் (Central Superior Services exam) தேர்வில் தேர்ச்சி பெற்று,காவல் துறையில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார்.

 

இதுகுறித்து தி எக்ஸ்பிரஸ் ட்ரீபுயூன் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் "எனது பெற்றோர்கள் என்னை பள்ளியில் சேர்த்ததை எனது உறவினர்கள் விரும்பவில்லை,இதனால் எனது பெற்றோருக்கு பல வழிகளிலும் தொல்லை கொடுக்க தொடங்கினார்கள்.இருப்பினும் எனது விருப்பத்தில் உறுதியாக இருந்த எனது பெற்றோர்,உறவினர்களின் கண்ணில் படாமல் இருக்க எங்களது கிராமத்தை விட்டு வெளியேறி நகரத்திற்கு செல்ல வேண்டியதானது.

 

எனது பெற்றோரின் விருப்பம் நான் சி.ஏ படிக்க வேண்டும் என்பது.ஆனால் நான் காவல்துறையில் சேர வேன்டும் என்ற ஆசையில்,சி.எஸ்.எஸ் தேர்வு எழுதி இன்று காவல்துறை அதிகாரியாக மக்களுக்கு பணி செய்யும் பொறுப்பில் இருக்கிறேன் என்று கூறினார்.மேலும் கடின உழைப்பாலும் முறையான வளர்ப்பினால் மட்டுமே இந்த வெற்றி தனக்கு கிடைத்ததாக மிடுக்குடன் கூறினார் சுஹாய் அஸிஸ் தல்பூர்.

PAKISTAN, CHINESE CONSULATE, TERRORIST ATTACK, SUHAI AZIZ TALPUR

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS