'377 தீர்ப்புக்கு பிறகான, நாட்டை உலுக்கிய தன்பாலின பலாத்கார வழக்கு.. இளம் பெண் கைது!

Home > தமிழ் news
By |

உச்சநீதிமன்றம் கடந்த வருடம் தன்பாலின சேர்க்கைக்கு இருந்த தடைச் சட்டப்பிரிவை நீக்கி, அது குற்றமற்றதாக அறிவிக்கப்பட்டு, பிரிவு 377-ன் கீழ் வயதுவந்தோர் உரிமைச் சட்டத்தை மாற்றியமைத்தது.

அதே சமயம் அனுமதி மற்றும் விருப்பமில்லாமல் தன் பாலின உறவுக்கு ஒருவரை வலுக்கட்டாயமாக பணித்தல் குற்றச் செயலாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சட்டத்தை அடுத்து நாடு முழுவதும் பல விதமான விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில் டெல்லியில் இளம் பெண் ஒருவரை இன்னொரு பெண் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

செயற்கை கருவி ஒன்றை பயன்படுத்தி 19 வயது இளம் பெண் ஒருவர் இப்படியான வன்மத்தை இன்னொரு பெண்ணின் மீது செலுத்தியத்தை அடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயலில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடந்த இந்த சம்பவத்துக்கு பிறகு காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை, ‘ஒரு பெண் இன்னொரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை எல்லாம் எடுத்துக்கொள்ள முடியாது, அதற்கு ஐபிசி புரோவிஷனில் இடம் இல்லை’ என்றுச் சொல்லி மறுத்தது தற்போதே தெரியவந்துள்ளது.

எனினும் பிரிவு எண் 377-ன் கீழ் தன் பாலின சேர்க்கை தடை நீக்கம் செய்யப்பட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பின்னர் , முதல் முறையாக இதே சட்டத்தின் குற்றப்பிரிவுக்கு கீழ் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு பார்க்கப்படுவதாக சட்ட ஆலோசகர்கள் கருதுகின்றனர்.

SEXUALABUSE, 377VERDICT, RAPE, SHOCKING, WOMAN

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS