பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் சிறைத்தண்டனையை ரத்து செய்யக்கூடாது என மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு குறித்து சில நாட்களுக்கு முன் விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விஷயத்தில் முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. எனவே தமிழக அரசு இது குறித்து ஆளுநரிடம் பரிந்துரை செய்யலாம் என தெரிவித்து, மத்திய அரசு தொடர்ந்த வழக்கினை முடித்து வைத்தது.

 

இதுதொடர்பாக தமிழக அரசின் அமைச்சரவைக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் இன்றுமாலை தொடங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.

 

சற்றுமுன் அமைச்சரவைக்கூட்டம் முடிவுக்கு வந்த நிலையில், '' ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க  ஆளுநருக்கு இன்றே பரிந்துரை கடிதம் அனுப்பப்படும்,'' என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும், ஏற்றுக் கொள்வார் எனவும் அமைச்சர் நம்பிக்கை ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

BY MANJULA | SEP 9, 2018 5:30 PM #TAMILNADU #PERARIVALAN #RAJIVGANDHI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS