'கணவருக்கு கடைசியா ஒரு முத்தம்'...கண்கலங்க வைத்த மேஜரின் மனைவி'...நெஞ்சை உலுக்கும் வீடியோ!

Home > தமிழ் news
By |

புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த மேஜரின் இறுதிச் சடங்கின்போது,அவரது உடலிற்கு அவரது மனைவி முத்தமிட்டு வழியனுப்பிய சம்பவம் அனைவரின் நெஞ்சையும் உலுக்குவதாக அமைந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அதில் தொடர்புடைய தீவிரவாதிகள் அந்த பகுதியில் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து அந்த பகுதியினை சுற்றி வளைத்த பாதுகாப்பு படை வீரர்கள்,தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டார்கள்.அதிகாலை தொடக்கி நடைபெற்ற இந்த துப்பாக்கி சூட்டில்,ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து வீரமரணம் அடைந்த மேஜர் வி.எஸ்.தவுன்டியாவின் உடல் அவரது சொந்த மாநிலமான உத்தரகாண்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.இறுதிச் சடங்கு பணிகள் டேராடூனில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இறுதிச் சடங்கில் மேஜரின் மனைவி நிகிதா கவுல் கலையாத மௌனத்துடன் அமர்ந்திருந்தார்.நீண்ட நேரம் தனது கணவரின் உடலை பார்த்து கொண்டிருந்த அவர்,திடீரென அவரிடம் சென்று பேசினார்.இறுதியில் மேஜரின் உடலுக்கு முத்தம் கொடுத்து வழியனுப்பினார்.இந்த காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.மேஜர் தவுன்டியால் என்றும் நிலைத்திருப்பார் என்று அங்கிருந்தவர்கள்.மேஜரை இறுதியாக வழியனுப்பி வைத்தனர்.

PULWAMAATTACK, CRPFJAWANS, JAMMUANDKASHMIR, PULWAMA MARTYR, MAJOR VIBHUTI SHANKAR DHOUNDIYAL

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS