ஸ்மார்ட் போன்கள் வந்த பிறகு செல்பி போட்டோக்கள் பெருகின. ஆனாலும் அவற்றை வெறுமனே சமூக வலைதளங்களில் போடுவதில் சலிப்புற்றவர்கள் பலர். அவர்களுக்காக வந்த சமூக வலைதளம்தான் இன்ஸ்டாகிராம். புகைப்படங்களை எடுத்து ஓரிரு வார்த்தைகளுடன் இன்ஸ்டண்ட்டாக பதிவிடுவதற்கு ஏற்ற அப்ளிகேஷனாக இதனை பலரும் தத்தம் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

 

மென்பொருளாக கணினியிலும் பயன்படுத்தப் படும் இந்த இன்ஸ்டாகிராம்தான் பல சமயங்களில் உடனடி தகவல்களை, செய்திகளைக் கடத்தவும் உதவுகிறது. இதில் பிரபலங்களால் பகிரப்படும் புகைப்படங்களே அதிகம், அவற்றிற்கு எண்ணற்ற ரசிகர்களும் இருக்கின்றனர். ஆனால் சில வெளிநாட்டு நடிகர்-நடிகையர், பிரபலங்கள் இந்த ஆப்பில் தங்களது புகைப்படங்களை பதிவிடுவதால் கோடிகளில் புரளுகின்றனர்.

 

இதில் உலகில் புகழ்பெற்ற கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பதிவிடும் ஒரு புகைப்படத்திற்கு 5.14 கோடி ரூபாயும், ஹாலிவுட் நடிகரும் குத்துச்சண்டை வீரருமான டுவைன் ’தி ராக்’ ஜான்சன் பதிவிடும் ஒரு புகைப்படத்துக்கு 4.5 கோடி ரூபாயும் அளிக்கப்படுகிறதாம்.

 

இவர்களையும் மிஞ்சிய ஒருவர் இருக்கிறார். அவர்தான் அமெரிக்க நடிகை கெய்லி ஜன்னர். இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படும் இவரின் ஒரே ஒரு புகைப்படத்துக்கு கொட்டிக் கொடுக்கப்படும் குட்டித் தொகை ‘ஜஸ்ட்’ 6.85 கோடி ரூபாய்தானாம்.

 

கலக்குங்க 'இன்ஸ்டா'ராணி...

BY SIVA SANKAR | AUG 4, 2018 5:54 PM #INSTAGRAM #KYLIE JENNER #ROCK JHONSON #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS