டிசம்பர் 31-க்கு பிறகு இந்தந்த மாடல் ஐ-போன், ஆண்ராய்டு போன்களில் வாட்ஸ்ஆப் இயங்காது!

Home > தமிழ் news
By |

உடனடி தகவல் பரிமாற்றங்களுக்கு இணையவழியில் இணையற்ற சேவையை வழங்கி வரும் செயலிகளுள் முக்கியமானதும் முதன்மையானதும்தான் வாட்ஸ் ஆப். உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பயனாளர்களைக் கொண்ட வாட்ஸ் ஆப்பினை தற்போது பேஸ்புக் தனது இணை நிறுவனமாக பராமரித்து வருகிறது என்றாலும், அதன் சிறப்பம்சங்களை இன்னும் முன்னேற்றும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறது.


முன்னதாக கடந்த வருடம் வரை, வாட்ஸ் ஆப்பில் போலியான தகவல்கள் வதந்திகளாக பரவுவதை கட்டுப்படுத்தக்கோரி எண்ணற்ற புகார்கள் மேலெழுந்தன. பின்னர் அவற்றை சரிசெய்வதாக வாட்ஸ் ஆப் பொறுப்பேற்றது. இதே போல் வாட்ஸ் ஆப் பணப்பரிவர்த்தனை வசதிகளை இந்திய பணப்புழக்க கட்டுப்பாட்டு ஆணையங்களுக்கு உட்பட்டு செய்யும் நோக்கில், இந்தியத் தலைமை அதிகாரியும் நியமிக்கப்பட்டார். இதனால் அந்த வசதியும் அடுத்து வரவிருக்கிறது.


இந்த நிலையில்தான் குண்டை தூக்கிப்போடும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.  அதன்படி, வாட்ஸ்ஆப் செயலியை ஜியோபோனில் இருக்கும் இயங்குதளம் போன்றவற்றில், எதிர்காலத்தில் பயன்படுத்த  முடியும் என்றும் அதே சமயம், நோக்கியா S40 போன்ற மாடல்களில் 2019 டிசம்பர் 31-க்கும் பிறகும், ஐ-போன் 7 மற்றும் ஆண்ராய்டு வெர்ஷன் 2.3.7 ஓஎஸ் கொண்ட போன்களில் 2020 பிப்ரவரி 1-ம் தேதிக்குப் பிறகும் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்த முடியாது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

ஏற்கனவே கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31 முதல், விண்டோஸ் 8.0, பிளாக்பெரி, பிளாக்பெரி 10 உள்ளிட்ட மாடல் போன்களில் வாட்ஸ் ஆப் சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SMARTPHONE, WHATSAPP, IPHONE, IOS, JIO, NOKIA, ANDROID, FACEBOOK, SOCIALMEDIA, INSTANTMESSAGE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS