'வாட்ஸ்அப்பில்' அதிக 'குட் மார்னிங் மெசேஜ்'...அனுப்புற ஆளா நீங்க?...அப்போ உஷாரா இருங்க!
Home > தமிழ் newsவாட்ஸ்அப் உபயோகிக்காத நபரே இல்லை என்று சொல்லுமளவிற்கு,அனைவராலும் உபயோகிக்கப்படும் ஒரு செயலியாக மாறி இருக்கிறது.அந்த காரணத்தினால் தானோ என்னவோ,வதந்திகளை பரப்பவும் பொய்யான செய்திகளை உலாவவிடவும் பலரும் வாட்ஸ்அப்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
இந்நிலையில் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் இந்திய அரசின் சார்பில் வாட்ஸ்அப்பிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்துதான் மொத்தம் 5 பேருக்குத்தான் ஒரு மெசேஜை ஃபார்வர்டு செய்யமுடியும் என்ற கட்டுப்பாடு இந்தியாவில் விதிக்கப்பட்டது.தற்போது அந்த கட்டுப்பாடு உலகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது.வாட்ஸ்அப் தன்னுடைய பயனாளர்களை,சந்தேகத்திற்குரிய கணக்குகளை ரிப்போர்ட் செய்யுமாறு வலியுறுத்துகிறது.இதன்முலம் பல மோசடி கணக்குகளை அளிக்க முடியும் என நம்புகிறது.
இதன் சாராம்சம் என்னவென்றால்,வாட்ஸ்அப் என்பது ஒரு தனிநபர் தொலைத்தொடர்பு சேவை தானே தவிர மொத்தமாகப் பலரைச் சென்றடைய உதவும் தளம் இல்லை என்பதனை உறுதி செய்கிறது.இந்நிலையில் பல்க் மெசேஜிங் எனப்படும் மொத்தமாக பலபேருக்கு அனுப்பும் தகவல்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிகிறது.அதாவது அதிகமாக `குட் மார்னிங்' மெசேஜ் அனுப்பினால் கூட உங்கள் கணக்கு நீக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.ஆனால் இதுகுறித்த தெளிவான வரைமுறைகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
போலி கணக்குகள் தொடங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பலபேருக்கு மெசேஜ் அனுப்பப்படும்.இதனை தடுப்பதற்காகவே இவ்வாறு 'பல்க் மெசேஜிங்' அனுப்பும் கணக்குகள் நீக்கப்படும் என தெரிகிறது.எனவே வழக்கமாக அனைத்து நண்பர்களுக்கும் குட் மார்னிங் மெசேஜ் அனுப்பும் மக்களே உஷாராக இருங்க.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- இந்திய அரசியல் கட்சிகளுக்கு வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் அதிரடி எச்சரிக்கை!
- ‘வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், மெசஞ்ஜர்’ -ஐ ஒரே குடையின் கீழ் கொண்டுவருகிறதா பேஸ்புக்?
- ‘ஒரே நேரத்தில் இவ்ளோ பேருக்குதான் மெசேஜ் அனுப்பலாம்’.. ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிய வாட்ஸ்ஆப்!
- WhatsApp unveils new update to limit this feature
- WhatsApp working on super cool feature to ensure chat protection
- பேஸ்புக், வாட்ஸ் ஆப்களில் வரும் பதிவுகளை ஃபார்வேடு பண்ண போறீங்களா? உஷார்!
- டிசம்பர் 31-க்கு பிறகு இந்தந்த மாடல் ஐ-போன், ஆண்ராய்டு போன்களில் வாட்ஸ்ஆப் இயங்காது!
- Man Sentenced To 60 Days In Jail & Fined For Calling Fiancé 'Idiot' On WhatsApp
- வரப்போகும் மனைவிக்கு வாட்ஸ்ஆப்பில் ‘இப்படி ஒரு வார்த்தை’யை அனுப்பியதால் 6 மாத சிறை!
- வாட்ஸ்ஆப் படங்களால் திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளைக்கு ஷாக் கொடுத்த பெண் வீட்டார்!