இந்தியாவின் வாட்ஸ் ஆப் நிறுவன தலைவரான ‘எஸ்டாப்’ இணை நிறுவனர்!

Home > தமிழ் news
By |

தனக்கான பயனாளிகளை வெற்றிகரமாக பிடித்துவிட்ட பேஸ்புக், தனது பயனாளர்களுக்கு வாட்ஸ் ஆப்பின் தேவை இருப்பதை அறிந்தவுடன் உடனே அதனையும் தன்னுடைய நிறுவனத்தின் கீழ், வாங்கி இணைத்துக்கொண்டது.  அவ்வப்போது வாட்ஸ் ஆப்பும் அப்டேட் மற்றும் அப்கிரேடு ஆகிவரும் அதே நிலையில், வாட்ஸ் ஆப் மூலம் பகிரப்படும் தகவல்களின் உண்மைத் தன்மை அறிவது பற்றிய சிரமங்களை பல்வேறு இடங்களில் காணமுடிகிறது. 

 

தொடர்ந்து வாட்ஸ் ஆப்பில் பகிரப்பட்டு வரும் வதந்தியான, உண்மைத் தன்மை அற்ற செய்திகளால் வடமாநிலங்களில் ஏகப்பட்ட பிரச்சனைகள் மனிதர்களுக்கிடையே தோன்றி வந்ததை செய்திகளில் இருந்து அறியலாம். இவற்றை முறைப்படுத்தவும், சரிப்படுத்தவும்  பிரபல மின்னணு பணப்பரிமாற்ற செயலியான எஸ்டாப் எனும் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தக்லைமை செயல் அதிகாரியுமான அபிஜித் போஸை  ‘வாட்ஸ்-ஆப் நிறுவன கண்காணிப்பு மற்றும் பொறுப்புணர்வுகளின் இந்திய தலைமையாக’ நியமிக்க இந்தியாவும் வாட்ஸ் ஆப் நிறுவனமும் ஒருங்கே திட்டமிட்டுள்ளன. 

 

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பதவியேற்கவுள்ள அபிஜித் போஸ் மேற்கண்ட பிரச்சனைகளை சரிப்படுத்தி மேம்பட்ட சமூகத்துக்கான மேம்பட்ட சமூக வலைதள கலாச்சாரத்தை நிறுவுவார் என இந்தியா எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது.

FACEBOOK, WHATSAPP, AJITHBOSE, TECHIE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS