ஐபோனை தொடர்ந்து:'ஆண்ட்ராய்டு போன்களிலும் புதிய வசதியை களமிறக்கும் வாட்ஸ்ஆப்'!

Home > தமிழ் news
By |

நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு ஐபோனை போன்று ஆண்ட்ராய்டு போன்களிலும் ஸ்டிக்கர்களை கொண்டு வரப்போவதாக வாட்ஸ்ஆப் அறிவித்துள்ளது.

 

பல மாதங்களாக இது குறித்த வதந்திகள் இணையத்தில் வலம் வந்த வண்ணம் இருந்தது.இந்நிலையில் ஆண்ட்ராய்டு போன்களிலும் வாட்ஸ் அப் ஸ்டிக்கர் அறிமுகம் செய்யப்பட இருப்பதை  உறுதி செய்துள்ளது  வாட்ஸ்ஆப்.மேலும் பயனாளர்கள் தங்களுக்கு பிடித்தமான ஸ்டிக்கர்களை எப்படி உருவாக்கலாம் என்பது குறித்தும் விளக்கியுள்ளது.மேலும் ஸ்டிக்கர்களை தாங்களே கொடுக்காமல் பயனாளர்களுக்கு தேவையான ஸ்டிக்கர்களை அவர்களே இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளும்படி வாட்ஸ் அப் திட்டமிட்டுள்ளது.

 

பயனாளர்களுக்கு 12 ஸ்டிக்கர் பேக்குகளை வாட்ஸ்ஆப்  கொடுக்கிறது. அதற்கு மேலும் ஸ்டிக்கர்கள் வேண்டுமென்று விரும்புவர்கள் கூகுள் பிளேயிலிருந்து ஸ்டிக்கர் பேக்குகளை டவுன்லோட் செய்து கொள்ளலாம். ஸ்மார்ட்போனில் ஸ்டிக்கர்களை டவுன்லோட் செய்ததும், வாட்ஸ் அப் வெப்பிலும் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

நீங்கள் டவுன்லோட் செய்த ஸ்டிக்கர் பேக் தேவையில்லை என்றால் மை ஸ்டிக்கர் டாப்பிலிருந்து நீக்கி விடலாம் என வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.இது பயனாளர்களுக்கு நிச்சயம் புது அனுபவமாகவும்,அவர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் எனவும் வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS