தமிழ் தேசியம்- இந்திய தேசியம்-திராவிடம் இவற்றில் தேமுதிக-வின் சித்தாந்தம் என்ன?: பிரேமலதா பதில்!

Home > தமிழ் news
By |

தமிழ்நாட்டில் தமிழ் தேசியம்- இந்திய தேசியம் - திராவிடம் போன்ற வெவ்வேறு சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்டு பல கட்சிகளும் ஒரு சில புரட்சிகர இயக்கங்களும் செயல்படுகின்றன. தமிழ் தேசிய சித்தாந்தத்தை அடிப்படையாக் கொண்டு 7 முக்கிய அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. 

 

திராவிடத்தை பொறுத்தவரை பெரியார் தொடங்கிய திராவிடர் கழகம் மட்டுமே இயக்கமாகவும் மற்ற கிளை இயக்கங்கள் வெகுஜன அரசியலில் திமுக, அதிமுக, மதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளாகவும் உருவாகியுள்ளன. 

 

எனினும் விஜயகாந்த் தொடங்கிய தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் திராவிட இயக்க சித்தாந்த அடிப்படையில் இயங்குவதாக பலரும் நினைத்திருக்கலாம். ஆனால் அதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவியும், புதிதாக தேமுதிக-வின் பொருளாளராக பொறுப்பேற்றுள்ளவருமான பிரேமலதா விஜயகாந்த், தன்னிடம் கேட்கப்பட்ட தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

 

அப்போது, ‘தமிழ் தேசியம்- இந்திய தேசியம்- திராவிடம் போன்ற சித்தாங்களுள் தேமுதிக எவ்வழியை பின்பற்றுகிறது’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, பதிலளித்த பிரேமலதா, ‘இந்திய தேசியமும் பேசுவதாகவும், திராவிட சிந்தனையும் உண்டு என்றும், தமிழுக்காக விஜயகாந்த் ஆற்றிய பங்குகளை அனைவருமே அறிவர்’ என்று பதில் அளித்துள்ளார்.   

VIJAYKANTH, PREMALTHAVIJAYKANTH, DMDK

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS