‘3 நாள் நான் உயிரோடு இருந்ததே என் குடும்பத்துக்கு தெரியாது’..ராணுவ வீரரின் உருக்கமான பேச்சு!

Home > தமிழ் news
By |

தான் உயிரோடு இருப்பதே மூன்று நாள்களுக்கு பிறகு தான் தன்னுடைய குடும்பத்தினருக்கு தெரியும் என சி.ஆர்.பி.எஃப் வீரர் கூறியது மனதை உருக வைத்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் கடந்த 14 -ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 -க்கும் மேற்பட்ட இந்திய துணை ராணுவப்படை வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தாக்குதல் நடந்ததை நேரில் பார்த்த சில வீரர்கள், அந்த சம்பவம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளனர். அதில் ஜஸ்விந்தர் பால் என்கிற வீரர் கூறியதாவது, ‘இந்த கொடூரத்தாக்குதலில் என் சக வீரர்கள் 44 பேரை இழந்துள்ளேன். இதை என்றுமே என்னால் மறக்க முடியாது. தாக்குதல் நடத்தப்பட்ட பேருந்திலிருந்து இரு பேருந்துகளுக்கு பின்னால் தான் நான் பயணித்தேன். திடீரென குண்டு வெடித்ததும் நாங்கள் அனைவரும் பேருந்தில் இருந்து இறங்கி பார்த்த போது, சாலைகள் முழுவதும் எங்கள் வீரர்களின் உடல்கள் சிதறி கிடந்தன. இதை பார்த்ததும் எனக்கு வார்த்தையே வரவில்லை’ என அந்த வீரர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசிய மற்றொரு வீரர் டேனிஷ் சந்த், நான் குண்டு துளைக்காத வாகனத்தில் இருந்தேன். தாக்குதல் நடந்த பின் அந்த இடத்தில் ஒரு வித அமைதி நிலவியது. தாக்குதலில் காயமடைந்த எங்கள் வீரர்களின் கதறலை என்னால் கேட்கவே முடியவில்லை. உடனே காயமடைந்த வீரர்களுக்கு நாங்களே முதலுதவி செய்தோம். இந்த தாக்குதல் நடந்த மூன்று நாள்களாக என் குடும்பத்தினர் எனக்கு என்ன ஆனது என தெரியாமல் திண்டாடியுள்ளனர். பின்னர் என் நண்பன் மூலம் நான் உயிரோடு இருக்கும் தகவலைத் தெரிவித்தேன்’ என டேனிஷ் சந்த் கூறியுள்ளார்.

PULWAMATERRORATTACKS, CRPFJAWANS, CRPFKASHMIRATTACK

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS