‘தனிநபரின் சாட்டிங் விபரங்களை போலீசுக்கு தருகிறோம்’.. பேஸ்புக் அதிரடி!

Home > தமிழ் news
By |

இனி குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க காவல் துறைக்கு உதவவிருப்பதாக பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

உலகில் அதிக மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளம் பேஸ்புக். இது தொடங்கப்பட்டு பல வருடங்கள் ஆன நிலையில், தொடர்ந்து பல அப்டேட்டுகளை அறிவித்து கோடிக்கணக்கான பயனாளர்களை தன்வசம் ஈர்த்து வைத்துள்ளது. மேலும் தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்காற்றிவரும் பேஸ்புக் செயலியை அதிக மக்கள் பயன்படுத்தும் நாடாக இந்தியா இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் பேஸ்புக் செயலியால் அதிகமான குற்றங்கள் நடந்துவருவதாகவும் பல குற்றச்சாட்டுகள் வந்த நிலையில் சில அதிரடி முடிவுகளை பேஸ்புக் நிறுவனம் எடுத்தது. அதில்,பேஸ்புக்கின் ஒரு பகுதியாக உள்ள வாட்ஸ் அப் மூலம் தவறான செய்திகள் அதிகம் பகிரப்படுவதாக வந்த புகாரால் ஒரு செய்தியை ஒரே நேரத்தில் 5 பேருக்கும் மட்டும் தான் அனுப்ப முடியும் என அதிரடியாக அறிவித்தது.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரிகளுக்கும், டெல்லி காவல் துறைக்கும் இடையே கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில், கடந்த சில ஆண்டுகளாக நடைபெறும் குற்றங்களுக்கு சமூக வலைதளங்களே முக்கிய காரணமாக இருப்பதாகவும், இதனால் குற்றவாளிகள் தங்களது உரையாடல்களை சமூக வலைதளங்களிலேயே அதிகம் பயன்படுத்துவதாகவும், குற்றங்களுக்கான ஆதாரங்களை திரட்ட கடினமாக உள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குற்றவாளிகளின் தனிப்பட்ட உரையாடல் விவரங்களை தர முன்வருவதாக பேஸ்புக் நிறுவனம் காவல் துறையினருக்கு வாக்களித்துள்ளது.

FACEBOOK, CHATS, POLICE, MESSAGES

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS