பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், விமானத்தில் வரும்பொழுது பாஜகவை விமர்சித்த சோபியாவுக்கும் அவருக்கும் வாக்குவாதம் உண்டானது. அதன் பின்னர் விமான நிலைய காவக்ல் துறையினரால் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுதலை பெற்று வெளிவந்துள்ள சோபியாவின் பாஸ்போர்ட் நகலை அவரது தந்தை காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.

 

நடிகர்கள்,  பாரதிராஜா உள்ளிட்ட இயக்குனர்கள், அரசியலாளர்கள் பலரும் தமிழிசைக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில், உண்மையில் மாணவி சோபியாவிற்கு தண்டனை வாங்கி தர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது என்றும், போலீசார்தான் அவரின் நடவடிக்கை-செயல் மீது சந்தேகப்பட்டு கைது செய்துள்ளதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் ஒரு தேசிய தமிழ் சேனலின் பிரத்தியேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS