‘இந்தியா பலத்துடன் வரும் என தெரியும்’..வெற்றி குறித்து மனம் திறந்த நியூஸிலாந்து கேப்டன்!

Home > News Shots > தமிழ் news
By |

இந்தியா-நியூஸிலாந்து இடையே நடந்த டி20 தொடரை கைப்பற்றியது குறித்து நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் மனம் திறந்துள்ளார்.

நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 4-1 என்கிற கணக்கில் இந்தியா வெற்றி பெற்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. இதனை அடுத்து நேற்று நடந்த இந்தியா- நியூஸிலாந்து இடையேயான 3 -வது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி வென்றதன் மூலம் 2-1 என்கிற கணக்கில் டி20 தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியது.

முன்னதாக நேற்று நடைபெற்ற 3 -வது டி20 போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 212 ரன்களை எடுத்தது. இதில்  நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களான டிம் செய்ஃபெர்ட் 25 பந்துகளில் 43 ரன்களும், கோலின் முன்ரோ 40 பந்துகளில் 71 ரன்களும் எடுத்து அசத்தினர்.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் ரோஹித் ஷர்மா  32 பந்துகளில் 38 ரன்களும், விஜய் சங்கர் 28 பந்துகளில் 43 ரன்களும் எடுத்தனர். இந்தியாவுக்கு எதிரான 3 -வது டி20 போட்டியை நியூஸிலாந்து அணி வென்றதன் மூலம் 2-1 என்கிற கணக்கில் தொடரை வென்று கோப்பையைக் கைப்பற்றியது.

இந்நிலையில் போட்டியின் வெற்றி குறித்து நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறியதாவது, ‘முதல் டி20 போட்டியில் நாங்கள் சிறப்பாக ஆடினோம். ஆனால் இரண்டாவது டி20 போட்டியில் இந்தியாவிடம் தோற்றதன் மூலம் நாங்கள் சிலவற்றை கற்றுக்கொண்டோம். அதனால் 3 -வது போட்டியில் இந்தியா பலத்துடன் வரும் என எங்களுக்கு தெரியும். இப்போட்டியில் கடைசி இரண்டு பந்துகள் வரை விறுவிறுப்பாக சென்றது’ என வில்லியம்சன் கூறினார்.

TEAMINDIA, NZVINDT20, ICC, BCCI, KANEWILLIAMSON

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES