இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில்,  இங்கிலாந்து 4-1 என்கிற விகிதத்தில் கைப்பற்றியது. கங்குலி உள்ளிட்ட முன்னாள் அணி வீரர்கள் பலரும் வீரட் கோலியை  விமர்சிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், பயிற்சியாளர் ரவிசாஸ்திரியோ, கடந்த 15- 20 வருடங்களை விடவும் இன்றைய இந்திய அணி சிறப்பாகவே செயல்படுவதாகவும் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த நிலையில், டெஸ்ட் தொடரை அடுத்து நிகழ்ந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ’ரவி சாஸ்திரி கூறிய அந்த வாக்கியம் உண்மை என்று நினைக்கிறீர்களா நீங்கள்? உங்களுக்கு எப்படி தோன்றுகிறது?’ என்று கேட்ட பத்திரிகையாளரின் கேள்வி ஒன்றிற்கு, சற்றே உணர்ச்சிவசப்பட்ட கோலி, இருப்பினும் ஷட்டிலாகவே, ’நீங்கள் உண்மை இல்லை என நினைக்கிறீர்களா. உங்களுக்கு என்ன தோன்றுகிறது?’ என்று கோலி மீண்டும் கேள்வி எழுப்ப, அதற்கு பத்திரிகையாளர், ‘என்னால், உறுதியாக அப்படிச் சொல்ல முடியவில்லை’ என்று கூற, மேலும் இறுக்கமான முகத்துடன் கோலி, ‘அப்படியானால் அது உங்கள் கருத்து.. நன்றி’ என்று கூறிய வீடியோ வைரலாகியுள்ளது.

 

மேலும் இந்த பேட்டி குறித்து மீண்டும் இன்னொரு சந்திப்பில் கருத்து சொன்ன கோலி, ‘முன்னாள் வீரர்கள் செய்த பல சாதனைகளை நாங்கள் முறியடிக்காமல் இருக்கலாம். நாங்கள் தொடந்து உழைக்கிறோம். நிகழும் தவறுகளில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டு அவற்றை அடுத்த முயற்சியில் களைய நினைக்கிறோம்’ என்று பாசிட்டிவாக பேசினார்.

BY SIVA SANKAR | SEP 12, 2018 3:52 PM #VIRATKOHLI #PRESSCONFERENCE #INDIA #RAVISHASTRI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS