'குடியிருப்பு பகுதியில் புகுந்த' சிறுத்தைப்புலி.. பதற வைக்கும் வீடியோ காட்சிகள்!

Home > தமிழ் news
By |

இந்தியாவில் சிறுத்தைப் புலிகளின் எண்ணிக்கை நாளடைவில் குறைவாகிக்கொண்டே இருக்கிறது. 

இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையில் இருந்த சிறுத்தை புலிகள், புவி வெப்பமயமாதலால் குறைந்து வரும் நீர்நிலைகள் மற்றும் பெருகிவரும் நகரக் கட்டமைப்புச் சூழலால் காடுகளை விட்டு இடம் பெயர்ந்து நகர எல்லைகளுக்கு புகுந்துவிடும் அபாயங்கள் வட இந்தியாவில் தொடர்ந்தபடியே உள்ளன.

அப்படி நகர எல்லைகளுக்குள் புகும் சிறுத்தைப் புலிகள் ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் விலங்குகளின் புகலிடங்களை வாழ்விடங்களாக மாற்றிய நகரமயமாதலில் விளைவுகளும் இவ்வாறு காடுகளில் இருந்து வெளிவந்து நகரக் கட்டமைப்புகளுக்குள் புகுந்துவிடும் சிறுத்தைப் புலிகளின் செயல்களுக்கு காரணமாகிறது. அப்படித்தான் சமீபத்தில் வெளிவந்த வீடியோ ஒன்றில் சிறுத்தைப்புலி நகரத்தின் எல்லைகளுக்குள் புகுந்து பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் நாஷிக் நகரத்துக்குள் சிறுத்தைப் புலி ஒன்று புகுந்ததோடு, அங்கிருக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து நடந்துவரும் அந்த வீடியோவில், அங்குள்ள மக்களை சிறுத்தைப் புலி பதற்றத்துக்கு உள்ளாக்குகிற காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. மேலும் ஒருவரை பிடித்து தாக்கிக்கொண்டிருக்கும் சிறுத்தைப் புலியை அங்கிருக்கும் காவலர் அடித்து விரட்டி அந்த நபரை காப்பாற்ற முயற்சிக்கிறார். 

ஆனாலும் விடாமல் அப்பகுதி குடியிருப்பு வாசிகளை தாக்கவும் அந்த சிறுத்தைப் புலி முயற்சிப்பதை அந்த வீடியோவில் காணமுடிகிறது. அதன் பின்னர் அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள்  சிறுத்தைப் புலியினை பிடித்து வனத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் அதிரவைத்ததோடு, வன ஆர்வலர்களிடையே சிறுத்தைப் புலிகளின் பாதுகாப்பை பற்றிய விவாதங்களையும் எழுப்பியுள்ளது.

VIRALVIDEOS, MAHARASHTRA, NASHIK

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS