பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மஹத் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு, பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.இதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

 

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மஹத் தனது நண்பன் சிம்புவை பார்க்கச் சென்றார். அங்கு மஹத்தை கன்னத்தில் அடித்து சிம்பு வரவேற்றார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

 

இந்தநிலையில்  பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களில் ஒருவரான பாடகி ரம்யா, வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வீடியோவுக்கு அடி உதவுவது போல அண்ணன்-தம்பி உதவ மாட்டான் என டைட்டில் வைத்துள்ளார்.

 

அதில், ''செய்வியா? செய்வியா? என கேட்டுக்கொண்டே கையில் இருக்கும் கட்டையால் ரம்யா, மஹத்தை அடிக்கிறார். பதிலுக்கு மஹத், '' மிஸ் யூ மும்தாஜ். பிக்பாஸ் என்னைக் காப்பாத்துங்க.பிஸிக்கல் வயலன்ஸ்,'' என்று கத்துகிறார்.

 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS