திமுக தலைவர் கருணாநிதி கூடுதல் சிகிச்சைக்காக,ஆம்புலன்ஸில் காவேரி மருத்துவமனைக்கு கடந்த சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


இதனைத்தொடர்ந்து காவேரி மருத்துவமனை முன் திமுக தொண்டர்கள் குவியத்தொடங்கினர். இதனால் காவேரி மருத்துவமனையை சுற்றிலும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.தொடர்ந்து அவரின் உடல்நிலை நன்றாக இருப்பதாக காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

 

திடீரென ஸ்டாலின், ராஜாத்தியம்மாள், கனிமொழி, உதயநிதி என கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் காவேரி மருத்துவமனைக்கு  வந்தனர். இதேபோல் தொண்டர்களும் அதிகளவில் குவிந்துள்ளனர்.இதற்கிடையே,கருணாநிதி உடல்நிலை சீரடைந்து வருவதாக காவேரி மருத்துவமனை சற்றுமுன் அறிக்கை வெளியிட்டது.

இந்தநிலையில் மருத்துவமனை முன் குவிந்துள்ள தொண்டர்களின் கூட்டம் அதிமானதால், இடமில்லாது தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளை கூட்டம் கீழே தள்ளியது. இதனை சமாளிக்க போலீஸ் லத்தி சார்ஜ் செய்து கூட்டத்தை கலைத்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

 

இதேபோல 'வாழ்க வாழ்க' என தொண்டர்கள் மருத்துவமனைக்கு முன் நின்று கோஷமிடும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. இதனால் காவேரி மருத்துவமனைக்கு வெளியே தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.

 

BY BEHINDWOODS NEWS BUREAU | JUL 29, 2018 11:33 PM #MKARUNANIDHI #DMK #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS