கடந்த 2 வாரங்களாக கொட்டித்தீர்க்கும் மழையால் கேரள மாநிலம் கடும் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.இந்த பயங்கர வெள்ளத்திற்கு இதுவரை 33 பேர் பலியாகியுள்ளதாகவும், 6 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இதனால் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடுக்கி அணையின் 5-வது ஷட்டர் திறக்கப்பட்டது. அதன் அருகேயுள்ள செருத்தோணி பாலத்தின் அருகே சிறு குழந்தை ஒன்றை கையில் வைத்துக்கொண்டு, ஒருவர் பயத்துடன் நின்று கொண்டிருந்தார்.

 

இதனைப் பார்த்த பேரிடர் மீட்புப் படையைச்சேர்ந்த கன்ஹயா குமார் என்னும் வீரர் சற்றும் தாமதிக்காமல் அந்த குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு, அவர்களையும் அழைத்துக்கொண்டு மறுகரை நோக்கி ஓடினார்.அவர்கள் மறுமுனையை அடைந்த சில நிமிடங்களில் அந்த பாலம் இடிந்து விழுந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

இதுகுறித்து கன்ஹயா கூறுகையில், "அவர்கள் பாலத்தைக் கடக்க பயத்துடன் நின்று கொண்டிருப்பதை பார்த்தேன்.அதனால் உடனடியாக ஓடிச்சென்று அவர்களை காப்பற்றினேன்.இது எனக்கு ஒன்றும் புதிதல்ல. இந்த பணியில் எனக்கு 6 ஆண்டுகள் அனுபவம் உள்ளது,'' என்றார்.

 

இதுபோன்ற தன்னலம் கருதாதவர்களின் செயல் தான், இந்த உலகத்தை இன்னும் உயிர்ப்புடன் வைத்துள்ளது போலும்...

 

BY MANJULA | AUG 12, 2018 4:30 PM #KERALAFLOOD #KERALA #NDRF #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS