‘இன்ஸ்டாகிராமில் ஃபேமஸ் ஆகவேண்டி இளைஞர் செய்த விநோத காரியம்’ .. வைரல் வீடியோ!

Home > தமிழ் news
By |

சமூக வலைதளங்களான ட்விட்டர், வாட்ஸாப், பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் மூலம் பலரும் பிரபலமாகியுள்ளனர்.

இணையதளங்களின் மூலம் பிரபலமாவதற்கு பலரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவர். ஆனால் தனது இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்று வைரல் ஆவதற்காக, இளைஞர் ஒருவர் செய்துள்ள பரபரப்பு காரியம் பலரையும் பதைபதைக்க வைத்துள்ளது.

ஆம், தான் உருவாக்கும் இன்ஸ்டாகிராம் வீடியோவை வைரலாக்குவதற்காக கப்பல் ஒன்றின் 11வது மாடி தளத்தில் இருந்து தாவி கடல் பரப்பின் மீது தாவி குதித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் 27 வயதான வாலிபர் வாஷிங்டன் நிக்கோலே நேதேவ் என்பவர்.

ராயல் கரீபியன் கப்பலில் பயணித்த நிக்கோலஸ், பஹமாஸின் அருகே செல்லும்போது இப்படியான மிரட்டலான காரியத்தைச் செய்து பலரையும் தடுமாற வைத்ததால்,  அவர் தொடர்ந்து அந்த கப்பலில் பயணிக்க தடை செய்யப்பட்டதோடு, அவர் மீதும் அவரின் இந்த காரியத்துக்கு உதவி செய்தவர்கள் மற்றும் இதனை வைரலாக்கும் முனைப்பில் வீடியோ எடுத்த நவரது நண்பர்கள் உள்ளிட்டவர்கள் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் கப்பல் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் நிக்கோலேவை பொருத்தவரை, முந்தைய நாள் இரவில், தான் மது அருந்தியதால் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார். மேலும் நிக்கோலஸால் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவிவரும் இந்த வீடியோவுக்கு பலரும் கணடனங்களையே கமெண்ட்டாக தெரிவித்து வருகின்றனர்.

 

VIRAL, VIDEO, INSTAGRAM

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS