பெங்களூர் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விபத்தொன்றில், பெற்றோர் தூக்கி வீசப்பட குழந்தை மட்டும் தனியாகப் பயணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இது தொடர்பாக பெங்களூர் போலீசார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அதில் முன்னால் செல்லும் வாகனங்களை முந்தும் நோக்குடன் கணவர் பைக்கை ஓட்டுகிறார். பின்னால் மனைவியும்,வண்டியின் முன்புறம் குழந்தையும் அமர்ந்துள்ளனர்.

 

சில நொடிகளில் பைக்கில் இருந்து கணவன்-மனைவி இருவரும் தூக்கி வீசப்படுகின்றனர்.ஆனால் குழந்தை மட்டும் பைக்கில் அமர்ந்துள்ளது. தொடர்ந்து வேகமாக சென்ற அந்த பைக், அருகில் இருந்த சாலை தடுப்புகளில் மோதி  புல்வெளியில் சாய அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்து குழந்தையை தூக்குகின்றனர்.

 

இந்த வீடியோவைப் பதிவிட்ட காவல்துறை, '' அதிக வேகம், ஹெல்மெட் இல்லாமல் வந்தது, செல்போன் பேசியது ஆகியவையே விபத்துக்குக் காரணம். நீங்கள் செய்யும் தவறுக்கு குழந்தை பொறுப்பாகுமா? நல்ல வேளை குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை,'' எனப் பதிவிட்டுள்ளனர். 

 

 

BY MANJULA | AUG 21, 2018 4:12 PM #ACCIDENT #BANGALORE #BIKE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS