'தரையிலயே படாமல் தரமான சம்பவம்'.. சர்ச்சையை கிளப்பிய கேட்ச்..வைரல் வீடியோ!
Home > தமிழ் newsஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் ப்ரண்டெம் மெக்குலத்தின் கேட்ச் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் எனும் 2 அணிகளுக்கு இடையே நிகழ்ந்த இந்த கிரிக்கெட் போட்டியில் 75 ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி தோல்வியுற்றது. ஆனாலும் ப்ரண்டெம் மெக்குலத்தின் ஒரு குறிப்பிட்ட கேட்ச் வைரலானதோடு பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிரிக்கெட் உலகத்துக்குள் உருவாக்கியுள்ளது.
முன்னதாக சிட்னி சிக்ஸர்ஸ் அணி பேட்டிங் செய்தபோது 16-வது ஓவரில் ஜேம்ஸ் வின்ஸ் அடித்த பந்து சிக்ஸரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அந்த சமயத்தில் பந்தைத் தடுத்த மெக்குல்லம் தன் முயற்சியில் தோல்வியுற்று, முதலில் பவுண்டரி லைனுக்கு அருகே விழுந்தார். ஆனால் இன்னும் பந்து கீழே விழாமல் பவுண்டரியைத் தாண்டிச் செல்வதைப் பார்த்த மெக்குல்லம் உந்திப் பறந்து, கை, கால்கள் எதுவும் தரையில் படாத நிலையில் தன் கையால் பந்தை பவுண்டரிக்குள் தட்டிவிட்டுள்ளார்.
இதனை மீண்டும் ரீ-பிளேயில் பார்த்த அம்பயர்கள் ‘இது சிக்ஸர் இல்லை’ என்கிற அறிவிப்பைக் கொடுத்தனர். இதனையடுத்து மெக்குல்லத்தின் இந்த அமேசிங் கேட்ச் அனைவராலும் பாராட்டுப்பட்டு வருகிறது. ஆனாலும் மெக்குல்லம் செய்த செயல் சரியா? தவறா? என்று சில ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்களிடையே விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்துள்ளன.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- ‘சியர் கேர்ள்ஸே தேவையில்ல..இவர் ஒருவரே போதும்’.. நடனமாடும் அம்பயரின் வைரல் வீடியோ!
- Wow! MS Dhoni close to breaking Sachin's massive record
- உலகிலேயே சிறந்த யார்க்கர் பவுலர் இவர்தான்.. பும்ராவைப் புகழ்ந்த வாசிம் அக்ரம்!
- ‘அவ்ளோ முக்கியமானது இல்ல’.. ஓய்வு குறித்த, கோலியின் வைரல் பதில்!
- ‘ஐடி கார்டு இல்லயா? அப்படி நில்லுங்க’.. பிரபல வீரரை நிறுத்திய செக்யூரிட்டி..வைரல் வீடியோ!
- 'பேட்ட' எடுத்துக்கிட்டு 'கெத்தா' நடந்து செல்லும் 'தல'.. நாடிநரம்பு புடைக்கும் ஆரவாரம்!
- Maxwell who dropped Dhoni yesterday shares interesting tweet
- ‘உண்மையில் நாம் கவலைப்பட வேண்டிய #10YearChallenge இதுமட்டும்தான்’.. கிரிக்கெட் வீரர் உருக்கம்!
- ஆஸ்திரேலிய மண்ணில் முழுமையான வரலாற்று வெற்றி.. அடித்து ஆடிய தோனி..முழுவிபரம் உள்ளே!
- ‘சுத்தி வர முடியாதா?’.. கண்ட்ரோலை இழந்த ‘கூல்’ தோனி.. வாங்கிக் கட்டிக்கொண்ட வீரர்!