திறமைகள் எங்கும் கொட்டிக்கிடக்கின்றன என்பதற்கு மற்றுமொரு உதாரணம் இந்த சம்பவம்.

 

இளைஞர்கள் கபடி விளையாடுகின்றனர். அதில் எதிரணிக்கு ரெய்டு செல்லும் இளைஞர் ஒருவர் அவர்கள் அனைவரையும் தாண்டிக்குதித்து, அபாரமாக விளையாடுகிறார்.

 

இதேபோல மீண்டும்,மீண்டும் அந்த இளைஞர் விளையாடி எதிரணி வீரர்களை ஆல் -அவுட் செய்கிறார். சாதாரணமாகப் பகிரப்பட்ட இந்த வீடியோ மிகக்குறுகிய நேரத்தில் 12,000 பார்வைகளைப் பெற்றுள்ளது.

 

இதெல்லாம் ஒரு சாதனையா? என கேட்கலாம். ஆனால் எந்த ஒரு பெரிய நட்சத்திரமோ அல்லது மிகப்பெரிய பார்வையாளர்களோ இல்லாத, ஒருவரின் பதிவு ஒருநாளில் இவ்வளவு பார்வைகளைப் பெறுவது உண்மையில் சாதனைதான்.

 

தற்போது கிரிக்கெட் தாண்டி கபடி,கால்பந்து பக்கமும் நமது பார்வைகளைத் திருப்பியுள்ளோம். அந்தவகையில் இதுபோன்ற திறமையானவர்களைக்  கண்டுபிடித்து ஊக்குவிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.

 

BY MANJULA | SEP 12, 2018 1:29 PM #KABAADI #VIDEO #TAMILNADU #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS