பெங்களூர்: நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்.. பதறவைக்கும் வீடியோ காட்சிகள்!

Home > தமிழ் news
By |

பெங்களூரில் நேருக்கு நேர் மோதி, இந்திய விமானப்படை விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன.

சில நாட்களுக்கு முன்பாக மிராஜ் -2000 ரக விமானம் சரியாக சோதனை செய்யப்படாததால், விமானம் டேக்-ஆப் செய்யும் நேரத்தில் கோளாறு வெளிப்பட்டு விமானம் விபத்துக்குள்ளாகியது. அதில் விமானிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்படியொரு விபத்து நிகழ்வு மீண்டும் பெங்களூரில் நிகழ்ந்துள்ளது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிகவிரைவில், ஏரோ இந்தியா 2019-ஆம் ஆண்டுக்கான விமான சாகச கண்காட்சி நடக்கவிருப்பதையொட்டி, பெங்களூரின் எலஹாங்காவில்,  விமான கண்காட்சிக்கான சாகச பயிற்சியில் ஈடுபட்டபோது இந்த விபத்து உண்டாகியிருப்பதாக தெரியவந்ததோடு, இந்திய விமானப்படை விமானங்கள் 2-ம் நேருக்கு நேருக்கு மோதி விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

சூர்ய கிரண் பிரிவை சேர்ந்த விமானங்கள்தான் நேருக்கு நேர் மோதியுள்ளன. எனினும் சரியான நேரத்தில் விமானிகள் எமர்ஜென்ஸி பாராஷூட்டை பயன்படுத்தி தப்பித்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதமின்றி தப்பித்துள்ளனர். இதனால் யாருக்கும் எவ்வித உயிர் சேதமும் இன்றி இந்த விமான விபத்து நிகழ்ந்துள்ளது. எனினும் இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

BENGALURU, AEROINDIA2019, YELAHANKA, SURYA KIRAN AEROBATICS, CRASH

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS