
இந்திய அணியின் அதிரடி முன்னாள் ஆட்டக்காரரான வீரேந்திர ஷேவாக் களத்தில் மட்டுமின்றி ட்விட்டரிலும் தனது அதிரடியை காட்டுபவர்.அவரது அதிரடி ட்விட்டுக்களுக்காகவே பெருவாரியான ரசிகர்கள் அவரை ட்விட்டரில் பின்தொடர்ந்து வருகின்றனர். கிரிக்கெட் விமர்சனங்கள் முதல் அரசியல் வரை அவரது ட்வீட்டுகளுக்கு, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், யோகிகளை போன்று பாபா வேடமிட்ட ஷேவாக் அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததோடு அருள் வாக்கியங்களையும் வழங்கியுள்ளார். அதில்,"தண்ணீரை வடிகட்டுவது போன்று குருவையும் வடிகட்டித் தேட வேண்டும்,'' என ஷேவாக் என அருளாசி வழங்கியுள்ளார்.
வீரேந்திர ஷேவாக்கை 'வீரு' என அழைத்து வரும் அவரது ரசிகர்கள் தற்போது அவருக்கு 'வீருபாபா' என பெயர் சூட்டியுள்ளனர்.
BY JENO | AUG 4, 2018 1:13 PM #VIRENDHARSHEWAG #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS
சென்னையில் 306 இடங்கள் வெள்ளப்பெருக்கின்போது பாதிப்படையும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.அதில் 37...