'கஷ்டப்பட்டு அடிச்ச ரன் எல்லாம்'.. 'ஜிஎஸ்டில' போய்டுச்சே!
Home > தமிழ் newsஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை விட இந்தியா அதிகம் அடித்தாலும் அடித்த ரன் எல்லாம் ஜிஎஸ்டியில் போய்விட்டதே என ட்விட்டரில் கிண்டலடித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் வீரேந்தர் சேவாக்.
பிரிஸ்பனில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது டி20 போட்டியில் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மழை குறிக்கிட்டதே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
டாஸில் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். மழை குறுக்கீட்டால் 17 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் குவித்தது. அதன் பின் டக்வோர்த் லூயிஸ் முறைப்படி ஸ்கோரில் மாற்றம் கொண்டுவரப்பட்டு இந்திய அணி 17 ஓவர்களில் 174 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.ஆனால் இந்திய அணி 17 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களே குவித்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் ட்விட்டரில் அவ்வப்போது நக்கலான ட்விட்களை பதிவிட்டு வரும் முன்னாள் இந்திய வீரர் வீரேந்தர் சேவாக்,இந்தியாவின் தோல்வி குறித்தும் நக்கலாக பதிவிட்டுள்ளார்.அவர் ட்விட்டரில்
" ஆஸ்திரேலிய அணியை விட அதிகமாக ரன் குவித்தாலும் இந்தியா தோற்றுள்ளது.ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை விட அதிகம் அடித்த ரன்கள் எல்லாம் ஜிஎஸ்டியில் போய்விட்டது போல. ஆனாலும் ஒரு த்ரில்லான போட்டியுடன் தொடரைத் துவங்கியிருக்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'யாரு சாமி இவன்'... குர்னல் பாண்டியா ஓவரை தெறிக்க விட்ட ஆஸ்திரேலிய வீரர்!
- 'மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம்'..குறைக்கப்பட்ட ஓவர்கள்:174 ரன்கள் வெற்றி இலக்கு!
- 'சொந்த அணியினை வீழ்த்த'.. இந்தியாவிற்கு 'டிப்ஸ்' கொடுத்த முன்னாள் வீரர்!
- Woman Tries To Chase Down Plane After Missing Her Flight; Video Goes Viral
- 'நாங்க எதையும் ஆரம்பிக்கமாட்டோம்',ஆனா...தன்மானத்துக்கு ஒன்னுனா சும்மா இருக்கமாட்டோம்!
- WATCH | Incredible Moment When A Dog Saved A Penalty During Football Match
- எந்த இடம் 'வலி கண்டாலும்' கண்ணுதானே கலங்கும்...வைரல் புகைப்படம்!
- உலகம் முழுவதும் ட்ரெண்டிங் ஆன #FacebookDown ஹேஷ்டேக்: பின்னணி என்ன?
- Is That Hermione Granger? This Girl Is A Spitting Image Of Younger Emma Watson From Harry Potter
- 'ஒரு ரூவா கூட தரமுடியாது'...நஷ்ட ஈடு கேட்ட பாகிஸ்தானிற்கு பதிலடி!