"இது எப்படி அவுட் ஆகும்"...கோலியின் இணையதள பக்கத்தை முடக்கிய ஹேக்கர்கள்!
Home > தமிழ் newsசமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெற்றன.அதில் இறுதி போட்டியில் இந்திய ,வங்க தேச அணிகள் மோதின.அந்த போட்டியில் இந்திய அணி வங்காளதேச அணியை வீழ்த்தி 7-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
இறுதி\போட்டியில் சிறப்பாக விளையாடிய வங்காளதேச தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ், 117 பந்துகளில் 121 ரன்கள் எடுத்தார்.லிட்டன் தாஸின் அடித்த சதம் வங்க தேச அணிக்கு மிகவும் பலம்வாய்ந்த ஒன்றாக இருந்தது.இதனால் வங்க தேசம் 222 ரன்களை எட்டியது. அவரை வெளியேற்றுவதற்கு பந்து வீச்சாளர்கள் கடும் சிரமப்பட்டார்கள்.
இந்நிலையில் லிட்டன் தாஸ் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் தோனியால் ஸ்டெம்பிங் முறையில் அவுட் செய்யப்பட்டார். முதலில் களத்தில் இருந்த நடுவருக்கு கடும் குழப்பத்தை அளித்தது, முடிவு மூன்றாவது நடுவருக்கு மாற்றப்பட்டது. நீண்ட நேர ஆய்வுக்குப் பின்னர் நடுவர் அவுட் என்று அறிவித்தார்.
இந்நிலையில் நடுவர் தவறாக அவுட் கொடுத்து விட்டதாகவும் அவரின் தவறான முடிவு தங்கள் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது என வங்கதேச ரசிகர்கள் புலம்பி வந்தனர். இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் இணையதள பக்கத்தை வங்காளதேசத்தை சேர்ந்த ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.
அதில், ’டியர் ஐசிசி, கிரிக்கெட் ஜெண்டில்மேன்கள் விளையாடும் விளையாட்டு இல்லையா ?. இது எப்படி அவுட் என்று கூறுங்கள். தவறாக அவுட் வழங்கிய நடுவர் மீது நடவடிக்கை எடுத்து இந்த உலகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.அவ்வாறு மன்னிப்பு கேட்கவில்லையென்றால் இணையதள பக்கங்கள் மீண்டும் மீண்டும் முடக்கப்படும்.
இந்திய சகோதர சகோதரிகளே, உங்களை அவமானப்படுத்தும் நோக்கில் நாங்கள் இதை நாங்கள் செய்யவில்லை. உங்கள் அணிக்கு இப்படி ஒரு அநீதி நடந்தால் உங்களது உணர்வுகள் எப்படி இருக்கும் என நீங்களும் சிந்தித்துப் பாருங்கள். கிரிக்கெட் விளையாட்டில் அனைத்து அணிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். இதற்காக இறுதி வரை நாங்கள் போராடுவோம்’ என முடக்கப்பட்ட இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால் ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி ஓய்வில் இருந்தார் ரோகித் சர்மா தான் கேப்டனாக அணியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- மின்னல் மனிதர்கள்...ட்விட்டரில் கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்!
- Virat Kohli has a message for Bangladesh after loss to India
- 'இந்திய' அணியின் முழுநேர 'கேப்டன்' பொறுப்பினை ஏற்கத் தயார்!
- MS Dhoni Becomes First Indian To Achieve This Milestone In International Cricket
- WATCH | 'Magician' Ravindra Jadeja Pulls Off A Lighting Fast Run-Out; Twitter Hails His Supreme Fielding
- அன்பிற்கு ஏது எல்லை...இந்தியர்களை நெகிழச்செய்த பாகிஸ்தான் ரசிகரின் செயல்!
- 'தோனி அவுட்'.. கேஎல் ராகுலை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
- Virat Kohli & Mirabai Chanu Conferred With This Prestigious Award
- மீண்டும் கேப்டனாக, ’தோனி’ களமிறங்கும் 200வது ஒருநாள் போட்டி!
- வாசிக்கப்போகும் முன், ’செய்தியாளர்’ செய்த காரியம்..வைரல் வீடியோ!